Featured Posts

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-02

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள்.

முன்னுரை:

இஸ்லாமிய ஷரீஅத்

    1. சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல.
    2. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்…
    3. அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்)
  1. அல்அக்லாக்:  பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், பிற மதத்தவருடான உறவு, பெற்றார் பிள்ளை கடமைகள்…
  2. அல்ஜினாயாத் (குற்றவியல் சட்டங்கள்): கிளர்ச்சி செய்தல், மதம் மாறுதல், திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, ஸகாத் மறுப்பு, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் முஸ்லிமின் நிலை…
  3. அல்அகீதா (அத்தவ்ஹீத்):  அல்லாஹ் என்பவனே வணங்கி வழிபடத் தகுதியானவன், அவனுக்கென அழகிய பெயர்கள், உயர்ந்த பண்புகள் உண்டு. அவை மனித பண்புகளுக்கு ஈடானதோ, ஒப்பானதோ அல்ல. அவனை இவ்வுலகில் யாராலும் காண முடியாது. ஆனால் அவனது உண்மையான தோற்றத்தில் மரணத்தின் பின் வரும் நிரந்தர நாளில் நேரடியாகக் காணவது நிச்சயம் என நம்பிக்கை கொள்ளுதல் போன்ற…

இதில் இலங்கை மத்ரஸா மௌலவிகள் பலர் அகீதாவில் வழிகெட்ட பின்னோர்களையும் சட்டப் பிரச்சினைகளில் முன்னோர், பின்னோர் என எல்லோரையும் எடுக்கும் நிலை காணப்படுவதால் அவர்களிடம் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் பாரிய இடைவெளியும் வழிகேடும் பிறந்தது என்பதே உண்மை.

அதனால் மேற்படி சொற் பிரயோகத்தில் காணப்படும் விளக்க குறைகளின் புள்ளியை கட்டாயம் நாம் அறிந்திருக்க வேண்டும்.

அரபிகளும் அரபிகள் அல்லாதவர்களும் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله போன்ற சொற்பிரயோகங்களை விளங்கி, விளக்கியதில் ஏற்பட்ட குழப்பம் ஒன்று எல்லாம் அவனே! அனைத்திலும் அவனே! போன்ற அத்வைத இணைவைத்தலுடன் இணை தெய்வங்கள் மூலமாகவே படைப்பாளாகிய அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற மற்றொரு இணைவைத்தலும் நிகழ்ந்தது எனலாம்.

இன்னொரு புறத்தில் மனிதர்களிடம் காணப்படும் அல்லாஹ் வின் படைப்புக்களாக உள்ள மனித உறுப்புக்களின் பெயர்கள் மற்றும் செயற்பாடுள் அல்லாஹ்வின் பண்புகளாக, அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடாது இப்படித்தான் என முறைமையும் கற்பிக்காது அவற்றின் வெளிப்படையான பொருளில் மாத்திரம் நபித்தோழர்கள், மற்றும் இமாம்கள் வழியில் ஒரு முஸ்லிம் நிலைப்படுத்தப்படுத்துகின்ற போது அவன் அல்லாஹ்வுக்கு சிலை வணக்க வழிபாட்டு உருவம் கற்பித்தவன் போன்று மக்களிடம் காட்டுகின்றவைகளின் மத்ஹபின் பெயர் ஷாஃபி, அகீதா வழிபடுவது அஷ்அரிய்யாம்.

நல்லறிஞரான ஷாஃபி இமாம் அவர்களை ஏன் இவர்கள் அகீதாவில் பின்பற்றுவதில்லை என அவர்களை நோக்கி நாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவ்வாறனவர்கள் முதலில் அல்லாஹ்வுக்குரிய பண்புகளாக இடம் பெறும் மனித உறுப்புக்களின் பெயர்களை மனிதர்கள் போன்று அல்லாஹ்வுக்கும் உருவமாகக் முதலில் கற்பனை செய்கின்றனர், அதன் பின்னர் அது எப்படி மனிதர்களிடம் இருப்பது அல்லாஹ்வுகாகு இருக்க முடியும்?! என தமக்குள் பிரம்மிக்கும் அவர்கள் அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை என்ற தடுமாற்றமும் அறிவீனமும் நிறைந்த நிலைக்கு வருவதனால் ஷாஃபி மத்ஹபை உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், போன்ற சாதாரண சட்டங்களுக்காகவும், பிற்காலத்தில் தோன்றிய வழிகேட்டு சிந்தனைப் பிரிவுகளான ஜஹ்மிய்யா, அஷ்அரிய்யா, மாத்ரீ(ரூ)திய்யா போன்ற பிரிவுகளின் அஸ்மா ஸிஃபாத் போக்காகக் கொள்ளப்படும் பாழடிப்பு, தவறான விளக்கமளித்தல், நிராகரிப்பு போன்ற வழிகேட்டில் ஊறித்திழைத்தவர்களை ஒரு புறத்திலும் மறு புறத்தில் இப்னு அரபி, அபூயஸீத் அல்-பிஸ்தாமி, ஜுனைத் அல்-பக்தாதி போன்ற வழிகெட்ட அத்வைத சூஃபிகளின் கோட்பாட்டிலும் தொங்கிக் கொண்டு மக்கா காஃபிர்கள் போன்று தமது சித்தாந்தமே சரி என்ற நிலைப்பாட்டிலும் ஷைதானைப் போன்று ஏறுக்குமாறான விளக்கம் எடுத்து பாரிய வழி கேட்டில் உழல்ந்து தமது விளக்கமே சரி எற்றும் வாதிடுகின்ற பலரை இந்நாட்டில் நம்மால் காண முடிகின்றது.

அரபியில் إله தரும் பொருள் .

“இலாஹ் إله” என்ற அரபு வார்த்தை أله அலிஹ என்ற இறந்த காலச் சொல்லின் செயற்படு பொருள், அல்லது பெயர் வினைச் சொல்லில் இருந்து பிறந்த ஒரு பொதுப் பெயர்ச் சொல்லாகும்.

பணிந்து நடத்தல் , மகத்துமாகவும் கண்ணியமாகவும் இரட்சகனாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் தருகின்றனர் அரபு அகராதி அறிஞர்கள்.

இலாஹ் إله என்ற சொல்லின் பண்மைச் சொல்லாக آلهة என்று கூறப்படும்.
இதற்கு அன்பு, மரியாதை தந்து வணங்கப்படும் கடவுள் என்று சில போதும் உண்மையாக வணங்கி வழிபடும் உண்மையான அல்லாஹ் என்றும் இதற்கு பொருள் கொள்ளப்பட்டாலும் ஒரு முஸ்லிம் உண்மையாக வணங்கி வழிபடும் அல்லாஹ் என்று புரிவதையே அல்லாஹ் தனது திருமறைமிலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது நம்பிக்கை, போதனை, நடத்தை அனைத்திலும் விளக்கி இருக்கிறார்கள். அரபிக் கவிஞர்கள் தமது கவிதைகளிலும், மக்கள் பேச்சிலும் அல்லாஹ் என்பதைக் குறிக்க உபயோகித்திருப்பதை அறிய முடிகின்றது .

நபித்தோழர் குபைப் (ரழி) அவர்கள் இலாஹ் என்ற வார்த்தையை அல்லாஹ் என்பதைக் குறிக்கப் பாவித்திருப்பதன் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.

وَلَسْتُ أُبَالِى حِينَ أُقْتَلُ مُسْلِمـــاً عَلَى أَيِّ جَنْبٍ كَانَ في اللهِ مَصْرَعِي

முஸ்லிம் என்ற நிலையில் கொல்லப்படுவது பற்றி நான் எதையும் பொருட்படுத்தவதில்லை.
அல்லாஹ்வின் விஷயத்தில் எனது கொலை எப்படியாக நடந்தேறினாலும் சரியே!

وَذَلِكَ في ذاتِ الإِلَهِ وَإِن يَشـــأ يُبارِك عَلى أَوصالِ شِلوٍ مُــمَزَّعِ

இது அல்லாஹ்வுக்காக த்தான் ( நடக்கின்றது). அவன் நாடினால் சிதைக்கப்பட்ட உறுப்புக்களில் விருத்தி செய்வான். என்ற கவிதையில் இலாஹ் إله என்ற
சொல் அல்லாஹ் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடியும்.

இலாஹ் إله என்ற
சொல் மொழி மற்றும் பொதுப் பொருள் வழக்கில் பின்வரும் பொருளில் இடம் பெற்றுள்ளது. (1)

أن معناه (الذي يستحق أن يكون معبودا) وليس فقط (المعبود)
فقد قال ابن منظور في لسان العرب (ج 13 / ص 467):

வணங்கப்பட என்று மட்டும் இல்லாமல் வணங்கப்படதத் தகுதியானவனாக இருப்பதையும் குறிக்கும். – என இமாம் இப்னு மன்ளூர் என்பவரை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி கருத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்ட நபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயம் முதல் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அதற்கெதிரான தூதர்களின் எதிர்ப்புப் பிரச்சாரம், அதற்காக அவர்கள் சுமந்த கஷ்டங்கள், பட்ட இடர்கள், துன்பங்கள் அனைத்தும் இலாஹ் என்பது வணங்கி வழிபடத் தகுதியான ஒருவனையே குறிப்பதை உண்மைப்படுத்துகின்றன.

அத்துடன்:

  1. வத்து, சுவா, யகூஸ், யவூக், நஸ்ர் போன்ற இறைநேசர்களை வழிபட வேண்டாம் என நபி நூஹ் (அலை) அவர்கள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததும்,
  2. இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் சிலைகளை உடைத்து நொறுக்கியமைக்காக அதை வணங்கியோரால் தீக் குன்றில் வீசப்பட்டதும்,
  3. இல்யாஸ் (அலை) அவர்கள் காளையை வணங்கியோரை எதிர்த்ததும்,
  4. மூஸா நபி (அலை) அவர்கள் காழைக் கன்றை எரித்து கடலில் தூவியதும்,
  5. மக்கா காஃபிர்கள் பூமியில் பல தெய்வங்களை வணங்கிய போது முகம்மது நபி (ஸல்) அவர்கள்  لا اله الا الله என்ற கலிமாவின் மூலம் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்ததன் காரணமாக அவர்கள் காஃபிர்களின் பல இன்னல்களுக்குளாகியதும் , மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (الإسراء/ ٨١)

சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்து போகக் கூடியதே என்றகுர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக கஃபாவில் காணப்பட்ட 360 சிலைகளையும் நொறுக்கி வீசியதும் அல்லாஹ் (الله) என்றும் தனித்து வணங்கப்படத் தகுதியானவன் என்ற கருத்தை வலப்படுத்தி, அதுதான் உண்மையும் என சுட்டிக்காட்டடுவதை அறியலாம்.

மேற்படி கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இடம் பெறும் பின்வரும் குர்ஆன் வசனங்களில் இலாஹ் தொடர்பான கருத்தைக் கவனிக்கவும்.

وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَٰهٌ وَفِي الْأَرْضِ إِلَٰهٌ ۚ وَهُوَ الْحَكِيمُ الْعَلِيمُ (الزخرف : ٨٤)

வானத்தில் (உண்மையாக) வணங்கப்படுபவனும் அவனே! பூமியில் ( உண்மையாக) வணங்கப்படுபவனும் அவனே! அவன் ஞானம் நிறைந்தவன், யாவற்றையும் நன்கு அறிந்தவன். (அஸ்ஸுக்ருஃப்) .

பல தெய்வங்களை எடுத்துக் கொண்டவர்களே நீங்கள் எடுத்துக் கொண்ட தெய்வங்கள் பொய்யானனவைகள். எனவே வணங்கத் தகுதி உள்ள அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுங்கள் என்பது இதன் பொருளாகும்.

مااتَّخَذَ اللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ (91) عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ (المؤمنون ٩١-٩٢)

(அவர்கள் கற்பனை செய்வது போன்று) அல்லாஹ் தனக்கென ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ள வில்லை. அவனுடன் (உலகைப் படைக்க , நிர்வகிக்க) இன்னொரு கடவுளும் இருந்ததில்லை. அப்படியாயின் (அந்த) ஒவ்வொரு தெய்வமும் அது படைத்ததோடு சென்றிருக்கும். (பலமிக்க ) ஒரு தெய்வம் (பலமற்ற) மற்றொரு தெய்வத்தின் மீது அத்துமீறி அதிகாரமும் செலுத்த இருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மறைவானதையும், முன்னால் இருப்பதையும் அறிந்ததவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான். (அல்முஃமினூன்- 91-92)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

2 comments

  1. ஜுனைதுல் பகுதாதி(ரஹ்) பற்றிய அறியாமையில் கட்டுரையாளர் உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *