கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள்; ஒடித்து விடுவீர்கள்!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“தமது மனைவிமார்கள் (குணநலன்களில் குறைபாடுகளின்றி) பூரணத்துவமான நிலையில் இருக்க வேண்டும் என்றே கணவன்மார்களில் அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்! இது, முடியாத விடயமாகும். இதன்மூலம் பெரும் கஷ்டத்தில் இவர்கள் வீழ்ந்து, தமது மனைவிமார்கள் மூலம் இல்லற இன்பத்தையும் ஏனைய சுகத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாகியும் விடுகின்றனர். சிலவேளை இது, நபியவர்கள் கூறியதுபோல ‘தலாக்’ எனும் மணவிலக்கிற்கும் இட்டுச்சென்று விடுகின்றது.
‘பெண் என்பவள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றாள். ஒரே (குணமுள்ள) வழியில் ஒருபோதும் உனக்கு அவள் இணங்கவேமாட்டாள். அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியதுதான்! அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய்; அவளை ஒடித்து விடுவதென்பது, அவளை மணவிலக்குச் செய்வதாகும்!’ (முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 2913)
எனவே, மார்க்கத்திற்கும் சிறப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மனைவி செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் பொருட்படுத்தாது, விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டியது கணவனுக்கு அவசியமாகும்!”.
{ நூல்: ‘ஹுகூகுன் தஅத் இலைஹல் fபித்ரா வ கர்ரரத்ஹாஷ் ஷரீஆ’, பக்கம்:22 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ إن كثيرا من الأزواج يريدون الحالة الكاملة من زوجاتهم! وهذا شيئ غير ممكن، وبذلك يقعون في النكد ولايتمكنون من الإستمتاع والمتعة بزوجاتهم، وربما أدّى ذلك إلى الطلاق، كما قال صلّى الله عليه وسلم: « إن المرأة خلقت من ضلع، لن تستقيم لك على طريقة. فإن استمتعت بها إستمتعت بها ويها عوج؛ وإن ذهبت تقيمها كسرتها؛ وكسرها طلاقها! » (مسلم ، رقم الحديث، ٢٩١٣)
فينبغي للزوج أن يتساهل ويتغاضى عن كل ما تفعله الزوجة إذا كان لا يخل بالدين أو الشرف ]
{ حقوق دعت إليها الفطرة وقرّرتها الشريعة، ص – ٢٢ }
தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)