பாடல்: அதிரை என். ஷஃபாத்
பாடியது: அதிரை ஜபருல்லாஹ்
“ஈரமான ரோஜாவே.. என்னப் பார்த்து மூடாதே” மெட்டுக்கான வரிகள்
ஈரமாகும் விழிதானே
ஈனமான செயல்தானே
பெண்ணில் என்ன பாவம்..பாவம்
மாறாதோ? மாபாவம் தீராதோ?
அன்னை தந்தை நெஞ்சில் நாளும்
அன்பாய் வளர்ந்து வரும் சேயும்..
என்ன செய்யும் இந்த கொடும் பூமியில்?
சின்னாபின்னம் செய்வோன் அருகாமையில்?
என் தேசமே!
அன்றாடம் அறிகின்றோம் இது போல கொடுமை…
என்றாலும் மறக்கின்றோம், மதிகெட்ட மடமை !!
(ஈரமாகும் விழிதானே)
நீதி செய்யும் எங்கள் மன்றம்..
நீடு துயில் கலைக்கும் என்றோ?
கொடும் பாவிக்கு கொலை தண்டம் இல்லை…
கொலை செய்யவும் இங்கு அச்சம் இல்லை…
பெரும் நாசமே..
இன்னொரு ஆசிஃபா இனிமேலும் இல்லை..
ஹாசினி போலன்றி வாழட்டும் பிள்ளை!
(ஈரமாகும் விழிதானே)
வாழ்த்துகள் சகோ அருமை