Featured Posts

பிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது?

தனது ஒரு முஸ்லிம் சகோதர சகோதரிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைத்தால் அதிகமான சகோதரர்கள்

بورك لك في الموهوب، وشكرت الواهب، وبلغ أشده، ورزقت بره

என்ற துஆவை வாழ்த்தாக கூறிவருவது வழமை.

ஆனால் மேற்கூறிய துஆவை நபியவர்கள் ஓதியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

இந்த துஆவை ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாக, முஸ்னத் இப்னில் ஜஃத் (3398), இப்னு அபித்துன்யாவின் ( 201/النفقة على العيال), இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் ஸுயூதியின் (وصول الأماني بأصول التهاني) ஆகிய நூட்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது மிகவும் பலவீனமான அறிவிப்பாகும்.

முதல் இரண்டு நூற்களிலும் உள்ள அறிவிப்பில் ஹைஸம் இப்னு ஜம்மாஸ் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு பலவீனமானவர் என இமாம்களான இப்னு மஈன், அஹ்மத், நஸாஈ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க: லிஸானுல் மீஸான்: 8299)

இமாம் ஸுயூதியின் நூலில் இடம்பெறும் அறிவிப்பில் குல்ஸூம் இப்னுல் ஜவ்ஷன் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரும் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு மிகவும் பலவீனமானவர் என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இமாம் புகாரி அவர்கள் நம்பிக்கையானவர் எனவும், இப்னு மஈன் பரவாயில்லை எனவும் கூறியுள்ளனர். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் :803)

ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மூலமாக ஆதாரபூர்வமான அறிவிப்பில் பின்வரும் துஆ இடம்பெற்றுள்ளது.

جَعَلَهُ اللَّهُ مُبَارَكًا عَلَيْكَ وَعَلَى أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

இதே துஆ அய்யூப் ஸக்தியானி )ரஹ்( அவர்கள் மூலமாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: இமாம் தபரானியின் துஆ எனும் நூல் :945, 946, இப்னு அபீ துன்யாவின் النفقة على العيال: 202)

இவைகள் அனைத்தையும் விட நபியவர்கள் ஓதிய ஆதாரபூர்மான பின்வரும் துஆவே மிகச் சிறந்ததாகும்.

بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَهُ بَرًّا تَقِيًّا

பெண் பிள்ளையாக இருந்தால் பின்வருமாறு மாற்றி ஓதவேண்டும்.

بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَها بَرَّةً تَقِيَّةً

ஒரு பெண்மணிக்கு வாழ்த்துச்சொல்வதாக இருந்தால் “லக” என்பதை “லகி” என மாற்றி ஓத வேண்டும்.

உசாத்துணை நூல்
وصول الأماني بأصول التهاني للسيوطي بتحقيق يحيى الحجوري

தொகுப்பு: அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ

2 comments

  1. அஸ்ஸலாமு அலைகும் (ரஹ்).
    துஆக்களை மொழிப்பெயர்த்து வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  2. Safiyyah Ibnathu Meeran

    பிள்ளைப் பிறந்ததற்கு வாழ்த்துச் சொல்லும் நபி வழி பிரார்த்தனை சம்பந்தமான ஹதீஸின் ஆதாரத்தன்மையில் சில குறைபாடுகள் காணப்படுவதாக எனது மறுபரிசீலனையின் போது காணக்கிடைத்தது. நடந்த தவறுக்கான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதுடன் நண்பர்களிடம் எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆனாலும் பொதுவாக குழந்தை பிறந்ததற்கு பரக்கத் வேண்டி துஆ செய்வதற்கு புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

    அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) கூறினார்:
    எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள். புகாரி :5467

    தவறுக்கான முக்கிய காரணம் மக்தபா ஷாமிலா மென்பொருளில் இடம்பெற்ற ஒரு தவறாகும். பெரும்பாலும் மூல நூட்களில் உள்ளவற்றுடன் ஒத்துச்செல்வதாக இருந்தாலும் சிலவேளை இவ்வாறு சொதப்பிவிடுவதும் உண்டு. எனவே குறித்த மென்பொருளைக் கையாள்வதில் மேலதிகக் கவனம் தேவை. பீ டி எப் நூல்களுடன் இணைக்கப்பட்ட மக்தபா ஷாமிலாவைப் பயன்படுத்துவது இக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.

    அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *