?படைத்தவன் ரஹ்மான் நமக்கு தந்துள்ள சொத்தில் அவன் வகுத்த சட்டமே வாரிசுரிமை சட்டம்
?ஒவ்வொரு முஸ்லிமும் தனது உறவுகளை அறிந்திருப்பதை போல் தான் மரணித்தால் தனது சொத்தில் இருந்து அந்த உறவுகளுக்கு சேர வேண்டிய உரிமையை அறிந்திருக்க வேண்டியது கட்டாயக்கடமை
?இஸ்லாத்தின் பெயரில் பெயரில் ஷாபி , ஹனபி , ஹம்பலி, மாலிகி என இன்னும் பல பிரிவுகள் குழுக்கள் இருந்தும் யாரும் இதில் முரண்பட வில்லை என்பது குறிப்பிடதக்க விடயம்
?எந்த அளவுக்கு எனில் அந்நிய அரசு கூட அதை நடைமுறை படுத்துவதை தடைசெய்ய வில்லை
?வாரிசுரிமைச் சட்ட முறைப்படி ஒருவருக்கு சேர வேண்டிய சொத்தை இன்னொருவர் அபகரித்தால் உரியவர் வழக்காடி அதை பெற்றுக் கொள்ள முடியும்
?ஒரு செல்வந்தரின் மரணத்தால் ஒரு ஏழை உறவு செல்வந்தர் ஆகும் அழகிய திட்டமே வாரிசுரிமை சட்டம்
?பெண்களை காவுகொள்ளும் சீதன பிசாசை ஒழித்து கட்ட சிறந்த வழிமுறை வாரிசுரிமை சட்டத்தை நடைமுறை படுத்துவதே
?இன்னும் தம்மை சுமந்து பெற்று வளர்த்த பெற்றோர் வீதியில் பிச்சை வாங்கும் நிலை ஏற்படுவதையும் முதியோர் இல்ல சிறை கைதிகளாக சிறைவைக்க படுவதையும் இல்லாது ஒழிக்க ஓரே வழி வாரிசுரிமை சட்டத்தை நடைமுறைபடுத்துவதே
?வாரிசுரிமை சட்டத்தை நடைமுறை படுத்துவோருக்கு பரிசு
تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் ?4:13
?இருந்தும்….
இந்த சட்டத்தின் எதிரிகள் பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்பதே கவலையான விடயம்…?
?இத்தகையோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை?
وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன்? 4:14
✍நட்புடன்
அல் ஹாபில் இன்திகாப் உமரி
I like Islamic books,
Very important duas every one super,