Featured Posts

ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47

-S.H.M. Ismail Salafi

கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்)
குளிப்பாட்டத் தகுதியானவர்கள்:

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன.

1. நல்லவர்கள்:
குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் தான் குளிப்பாட்டும் போது ஜனாஸாவில் ஏதாவது குறைபாடுகளைக் கண்டால் அதை பகிரங்கப்படுத்தாமல் மறைக்கும் அவசியத்தை உணர்ந்திருப்பார். எனவே, மார்க்க அறிவும் பேணுதலும் உள்ளவர்களையே குளிப்பாட்டத் தெரிவு செய்ய வேண்டும்.

2. அனுபவம்:
குளிப்பாட்டுபவர் சட்டதிட்டங்களை அறிந்தி ருப்பதுடன் இது தொடர்பில் அனுபவம் உள்ளவராக வும் இருக்க வேண்டும். நபி(ச) அவர்கள் தனது மகளைக் குளிப்பாட்டும் பொறுப்பை உம்மு அதிய்யா (Ë) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். உம்மு அதிய்யா (Ë) அவர்கள் அந்தக் காலத்தில் பெண் ஜனாஸாக்களைக் குளிப்பாட்டி அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள்.
குளிப்பாட்டும் முறை:
ஜனாஸாவைக் குளிப்பாட்டும் முறைக்கான அடிப்படை ஆதாரமாக உம்மு அதிய்யா (Ë) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் அமைந்துள்ளது.

உம்மு அதிய்யா(Ë) அறிவித்தார். ‘நபி(ச) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ச) அவர்கள், ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப் பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ எனக் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில், ‘ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குளிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்தி லிருந்தும் வுழூச் செய்ய வேண்டிய பகுதிகளி லிருந்தும் துவங்குங்கள்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என்றும் ‘நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்’ என உம்மு அதிய்யா(Ë) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.’
(நூல்: புகாரி: 1254, முஸ்லிம்: 939, அபூதாவூத்: 3142, இப்னுமாஜா: 1458)

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் மற்றும் ஏனைய அறிவிப்புக்களை வைத்து ஜனாஸாவைக் குளிப்பாட்டும் முறை குறித்து சுருக்கமாகப் பின்வரு மாறு விபரிக்கலாம்.

1. மென்மையைக் கடைப்பிடித்தல்.
குளிப்பாட்டும் போதும் ஜனாஸா தொடர்பான எல்லா செயற்பாடுகளிலும் நிதானமும் மென்மைப் போக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

‘மரணித்தவரின் எலும்பை முறிப்பது உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றதாகும்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
நூல்: இப்னுமாஜா: 1616, அபூதாவூத்: 3207, அஹ்மத்: 25356

இந்த அறிவிப்பு ஸஹீஹான அறிவிப்பு என்று இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடு கின்றார்கள்.

அத்துடன் பொதுவாக நபியவர்கள் எல்லா விடயத்திலும் மென்மையைக் கடைப்பிடிக்குமாறு ஏவியுள்ளமையும் கவனிக்கத்தக்கவையாகும்.

‘மென்மை எதில் இருக்கின்றதோ அது நிச்சயமாக சாதித்துவிடும். எதிலிருந்து மென்மை இழக்கப்படுகின்றதோ அது வீழ்ந்துவிடும்.’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
நூல்: முஸ்லிம் 2494-78

எனவே, குளிப்பாட்டும் விடயத்தில் மையித் மென்மையாகக் கையாளப்பட வேண்டும்.

2. ஜனாஸாவின் ஆடைகளை நீக்கி மர்மஸ் தானத்தை மட்டும் மூடிவிட வேண்டும்:
நபி(ச) அவர்களின் மரணத்தின் பின் அவரை எப்படிக் குளிப்பாட்டுவது என்பது விடயத்தில் நபித்தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு வந்தது. இது குறித்து ஆயிஷா(Ë) அவர்கள் அறிவிக்கும் போது,

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வின் தூதர்(ச) அவர்களைக் குளிப்பாட்டும் விடயத்தில் என்ன செய்வது என்பது எமக்குத் தெரியாது. ஏனைய சடலங்களை அகற்றுவது போல் அகற்றுவதா அல்லது அவரை ஆடை அணிந்த நிலையிலேயே குளிப்பாட்டுவதா’ என்ற கருத்து வேறுபாடு கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: அஹ்மத்: 26306, அபூதாவூத்: 3141)

அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இது ஸஹீஹான அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.)

இதில் ஏனைய ஜனாஸாக்களை நபித் தோழர்கள் ஆடைகளைக் களைந்தே குளிப்பாட்டி யுள்ளனர் என்பது தெளிவாகின்றது. எனினும், ‘ஒரு ஆண் மற்றொரு ஆணின் அவ்ரத்தையோ ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அவ்ரத்தையோ பார்க்க வேண்டாம்.’ (முஸ்லிம்: 338-74, அஹ்மத்: 11606, இப்னுமாஜா: 661, திர்மிதி: 2793) என்ற ஹதீஸின் அடிப்படையில் அவ்ரத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்.

3. பெண் மையித்தாக இருந்தால் தலை வாரி, தலை முடியைப் பின்னிவிட்டுக் கொள்ள வேண்டும்.

உம்மு அதிய்யா(Ë) அறிவித்தார். ‘நபி(ச)அவர்களின் மகளின் மய்யித்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.’ (புகாரி: 1260)

4. தண்ணீருடன் இலந்தை இலை அல்லது பொருத்தமான பொருட்களைக் கலக்கலாம். மையித்துக்குப் பயனளிக்கும் என்றால் தண்ணீரை சூடாக்கிக் கொள்ளலாம்.

5. ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி மையித்தின் வலப் பக்கத்திலிருந்து வுழூவின் உறுப்புக்களிலிருந்து துவங்க வேண்டும்.

மையித்தை வாய் கழுவும் போது உள்ளுக்குள் நீர் சென்று வெளியே வரலாம் என்றால் ஈர விரலால் பல் துலக்கி சுத்தப்படுத்தலாம்.

6. தலையை இலந்தை இலை கலந்த அல்லது சவர்க்காரமிட்டு முடியின் அடி வரை நன்றாகக் கழுவ வேண்டும்.

7. முதலில் வலது புறம், அடுத்து இடது புறமாக முழு உடலையும் கழுவ வேண்டும்.
8. எவ்வளவு வேண்டுமானாலும் தேவையான அளவுக்கு நீரூற்றிக் கழுவலாம். ஆனால், மூன்று முறை அல்லது ஐந்து முறை என ஒற்றைப் படையாக நீரூற்றிக் கழுவுதல் சுன்னாவாகும்.

9. இறுதியாக ஊற்றும் நீரில் கற்பூரம் கலந்து அல்லது வாசனைகள் கலந்து குளிப்பாட்ட வேண்டும். இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்திருந்தால் வாசனை கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

10. குளிப்பாட்டும் போது அவ்ரத்தைக் கையால் நேரடியாகத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கையில் கையுறையிட்டுக் கொள்ளலாம்.

மையித்தின் முடி, நகம் களையலாமா?:
இறந்தவரின் மறைவிட உரோமங்கள் மற்றும் நகங்களைக் களையலாமா என்பது விடயத்தில் அறிஞர்களிடம் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

முதலாவது கருத்து:
சுத்தப்படுத்தல், அசுத்தத்தை அகற்றுதல் என்பது குளிப்பாட்டுவதன் நோக்கமாகும். இந்த அடிப்படையில் இயற்கையான சுன்னத்துக்களை நிறைவேற்றலாம் என்ற அடிப்படையில் நகம், முடி என்பவற்றைக் களையலாம்.

‘ஹ§பைல்(வ) அவர்களை முஷ்ரிக்குகள் கொலை செய்வதற்கு முன்னர் அவர் சவரக் கத்தியை வாங்கி தனது மறைவிட உரோமங் களைக் களைந்தார். ஏன்’ என்பது பிரபலமான செய்தியாகும். அவர் முஷ்ரிக்குகளுக்கு மத்தியில் கொல்லப்படப் போகின்றார். இந்நிலையில் அவர் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஸஃத்(வ) அவர்கள் ஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். சவரக் கத்தியை வரவழைத்து மழித்தார்கள் என அபூ குலாபா(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸன்னப் இப்னு அபீ ஷைபா: 10947)

இந்த செய்தியை ஜனாஸாவின் உரோமங்கள் மற்றும் நகங்களைக் களையலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

இரண்டாவது கருத்து: இவ்வாறு செய்வது ‘மக்ரூஹ்’ – வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில், இது கத்னாவைப் போன்று மையித்தின் உடலிலிருந்து ஒரு பகுதியை எடுப்பது போன்றதாகும் எனக் கருதுகின்றனர். இக்கருத்துடைய அறிஞர்களில் ஒருவரான இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் ஒரு நோயாளி மரணத்தை நெருங்கிவிட்டால் அவரது மறைவிட உரோமங்களையும் நகங்களை யும் களைவதை விரும்புபவராக இருந்தார்கள். ஆனால், மரணித்துவிட்டால் இவற்றில் எதுவும் எடுக்கப்படமாட்டாது.
(முஸன்னப் இப்னு அபீ ஷைபா: 10948)

இந்த விடயத்தில் ஜனாஸாவின் நலன் நாடி செயற்படுவதே பொருத்தமானதாகும். அசிங்க மான அளவுக்கு உரோமங்களோ, நகங்களோ வளர்ந்திருந்தால் சுத்தம் செய்தல் என்ற அடிப்படையில் அவற்றை நீக்கி தூய்மைப்படுத்தி மையித்தை அடக்கம் செய்வதே பொருத்தமான தாகத் தென்படுகின்றது.

கர்ப்பிணித் தாய்:
ஒரு கர்பிணித்தாய் மரணித்து அவளது வயிற்றில் குழந்தை இருந்து அது உயிருடன் இருப்பதாகக் கருதினால் கருவை வெளியில் எடுப்பதற்காக வயிற்றைக் கிழிக்கலாம். குழந்தை இறந்திருக்கலாம் என்றிருந்தால் அல்லது ரூஹ் ஊதப்படுவதற்கு முன்னர் (நான்கு மாதத்திற்கு முன்னர்) தாய் மரணித்திருந்தால் வயிற்றைக் கிழித்து கருவை வெளியில் எடுக்க வேண்டிய தில்லை. இதுவே ஷாபி மற்றும் ஹனபி அறிஞர் களின் கருத்தாகும். இதுவே பொருத்தமாகும்.

மாதத்தீட்டுடைய பெண்:
ஒரு பெண் மாதத்தீட்டுடன் அல்லது குளிப்பு கடமையான நிலையில் மரணித்தால் ஒரு முறைதான் குளிப்பாட்டப்படுவாள். மாதத் தீட்டுக்காக (ஜனாபத்துக்காக) குளிக்க வேண்டும் என்ற சட்டத்திலிருந்து மரணித்ததும் அவள் விடுபட்டுவிடுவாள். சட்டங்கள் உயிருள்ளவர் களுக்குரியதாகும். எனவே, ஒரு முறை குளிப்பாட்டினால் போதுமானதாகும்.

ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது என்பது ஒரு இபாதத்தாகும். இதன் மூலம் மையித்து சுத்தமான நிலையில் மறுமைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது நோக்கமாகும். ஒரு முறை குளிப்பாட்டுவதன் மூலம் இது நடந்துவிடும். அத்துடன் உலகில் உயிர் வாழும் போதே ஒரு பெண் ணுக்கு மாதத்தீட்டும், ஜனாபத்தும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் இரண்டுக்குமாக ஒரு முறைதான் குளிப்பாள். மாறாக இரண்டு முறை குளிக்க மாட்டாள். எனவே, மாதத்தீட்டு, பிரசவத் தீட்டுடன் மரணித்த பெண்கள் ஒரு முறைதான் குளிப்பாட்டப் பட வேண்டும்.

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் கட்டாயம் குளிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். இது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஹன்பலி மத்ஹபினர் மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டியதுமில்லை, வுழூச் செய்ய வேண்டியதுமில்லை என்ற கருத்தில் இருக்கின்றனர். இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்கள்.
(அல் பஹ்ருர் ராயிக் ஷரஹ§ கன்சுன்த தாயிக்:2 {188)

ஷாபி மற்றும் மாலிகி அறிஞர்கள் மையித்துக் குளிப்பாட்டியவர் குளிப்பதை ‘முஸ்தஹப்’ – விருப்பத்துக்குரியதாகப் பார்க்கின்றனர்.

இமாம் தர்தீர் ஷரஹில் கபீரில் இது குறித்து குறிப்பிடும் போது,

‘ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்பது கடமையைக் குறிக்காது. அது விருப்பத்துக்குரியதாகும். முவத்தாவில் இடம் பெற்றுள்ள அபூஹ§iரா(வ) அவர்களின் அறிவிப்பில் மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்கட்டும் என்று இடம் பெற்றிருப்பது முழு உடலையும் கடமைக்குக் குளிப்பது போல் கழுவ வேண்டும் என்பதைக் குறிக்காது. எனினும், மையத்துடன் நேரடியாகப் பட்ட உறுப்புக்களைக் கழுவுவதைக் குறிப்பதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஷரஹ§ல் கபீர் லிஷ் ஷெய்க் அத்தர்தீர்: 1{416)

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிப்பது கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும். சில அறிவிப்புக்கள் குளிக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தாலும் அவை பலவீனமானதாக உள்ளன. அத்துடன் அவை ஸஹீஹ் என்றாலும் குளிப்பது கடமை என்பதைக் குறிக்காது. குளிப்பது நல்லது என்ற கருத்தையே தரும்.

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்கட்டும். சுமந்தவர் வுழூச் செய்து கொள்ளட்டும் என்ற கருத்தில் இடம் பெற்றுள்ள அறிவிப்புக்கள் போதிய ஆதாரமற்றதாகும் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

குளிப்பாட்ட முடியாவிட்டால்!,..:
தண்ணீர் இல்லாமையினால் அல்லது மையித்து குளிப்பாட்ட முடியாத அளவுக்கு பாதிக்கப் பட்டிருந்தால் தயம்மும் செய்ய வேண்டும். இந்த தயம்முமால் ஜனாஸாவின் உடல் நேரடியாக சுத்தமாக்கப்படாவிட்டாலும் இதன் மூலம் குளிப்பாட்டுதல் என்ற இபாதத்திற்கு மாற்றுப் பரிகாரம் கண்டதாக அமையும். பூமி முழுவதும் எனக்கு மஸ்ஜித் – தொழுமிடமாகவும் தண்ணீர் இல்லாத போது சுத்தப்படுத்தக் கூடியதாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது.’ (புகாரி) என்ற ஹதீஸ§ம் இதற்கான ஆதாரமாகும்.
தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *