இலங்கையின் வடமாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சான்றாதாரங்களுடனும் தனித்துவமான கலாசாரப் பண்புக் கூறுகளுடனும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை, 1990ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் 24 மணிநேரக் கெடு வழங்கப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அணிந்திருந்த ஆடையுடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்டனர். இக்கொடூர நிகழ்வு நடைபெற்று மூன்று தசாப்தங்கள் நிறைவடைகின்றன. இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் துயர நிலையை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆராய்கிறது.