முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஆளுமையை மாசு படுத்தும் வகையில்,தொடர்தேர்ச்சியான மேற்குலகின் அநாகரிகச் செயற்பாடுகள், முஸ்லிம் உலகில் அதற்கு எதிரான குரலை மிகப் பலமாக ஒலிக்கச் செய்துள்ளது.
Charlie Hebdo என்ற மதவெறி கொண்ட பிரான்ஸ் பத்தரிக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று கற்பனையாக சித்திரித்து, நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை wheel chairல் தள்ளிக் கொண்டு செல்வது போன்று அட்டைப்படத்தையும் வடிவமைத்துள்ளது.
இறைத்தூதரின் புனிதத் தன்மையை மாசுபடுத்தும் குப்ரின் மதங்களின் இவ்வாறான கூட்டு முயற்சிகள் அண்மைக் காலத்தில் தோன்றிய ஒரு செயல்பாடு அல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இஸ்லாத்தின் துவக்க நாட்களிலும் இது நடந்துள்ளது. கருத்தியல் சுதந்திரம் என்ற போர்வையில் அண்மையில் வெளிவந்த கேலிச் சித்திரத்தின் பின்னணியையும் அதற்கான வரலாற்றுக் காரணத்தையும் இவ்வாக்கம் ஆராய்கிறது.