அஷ்ஷைய்க் M.அப்துல் ஹபீழ் (M.A)
மர்ஹூம் முஹம்மத் காலித் முஹம்மத் ஸவாஹிர் அவர்கள் இலங்கை ஹெம்மாதகம – பள்ளிப்போர்வைப் பிரதேசத்தில் ஆசாரமான குடும்பத்தில் 05/06/1942ம் ஆண்டு பிறந்துள்ளார். அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பறகஹதெனிய ஸலபிய்யாக் கலாபீடத்தில் பொதுக் கல்விக்கான அத்திபாரத்தையிட்டவர்களில் மிக முக்கியமானவர்.
முஹம்மத் ஸவாஹிர் அவர்கள், ஸலபிய்யாக் கலாபீடத்திலிருந்து முதலாவதாகப் பேராதனைப் பல்கலைகழகம் சென்று, கலைமாணிப் பட்டம் பெற்று, கல்விப் பயணத்தில் உயர் கற்கைக்கான முயற்சியில், ஐக்கிய இராச்சியம் சென்று, ஸலபிகளில் முதலாவது கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்ஷைக் M.Z.M. நபீல் ஸலபி அவர்களின் தந்தையாவார்.
சமயத் துறைக் கல்வி கற்போர், பொதுக் கல்வியையும் பெற்று, பன்முக ஆளுமையுள்ளவர்களாகத் திகழ வேண்டும் என்று வலிமையாகக் குரல் எழுப்பியவர்களில் இவரது வகிபாகம் முக்கியத்துவமுடையதும் நன்றி பாராட்டத்தக்கதுமாகும். ஸலபிய்யாக் கலாபீட மாணவர்களின் பொதுக் கல்வியில் ஒரு திருப்பு முனையின் புள்ளியாக இவர் திகழ்ந்துள்ளார். எனினும், அவர் பற்றி இதுவரை ஸலபிய்யா வரலாற்றின் எந்தப் பதிவுகளிலும் வரவில்லை.
எளிமையான வாழ்வும் ஆழ்ந்த ஆன்மீகப் பண்பும் அனைவரையும் மதிக்கும் அவரது குணமும் தூய்மை பேணும் அவரது ஆடை முறையும் அவரது தனித்துவமான அடையாளமாகக் காணப்பட்டது.
ஆழ்ந்த தியாகமும், அர்ப்பணித்த வாழ்வும் முற்போக்குச் சிந்தனையும் சமூக மேம்பாட்டு அக்கறையும் கொண்ட அவர் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகப் பேசப்படுகிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.