ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம்
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
எவன் மறுமையைப் பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம்.
(அல்குர்ஆன் : 39:9)
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் சிலரிடமிருந்த நற்பண்பு :
لَـيْسُوْا سَوَآءً مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيْلِ وَ هُمْ يَسْجُدُوْنَ
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 3:113)
இரவு நேரத்தில் இறைவனை வணங்குவது எமக்கு மாத்திரமின்றி முன்னைய சமூகத்தாருக்கும் மார்க்கமாக்கப்பட்டிருந்த காரியம் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்கு நபி தாவூத் (அலை) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிய ஹதீஸும் எமக்கு சிறந்த சான்றாகும்.
இறுதித் தொடரில் நபிகளாரின் இரவுத் தொழுகை பற்றி நாம் சற்று விரிவாக அறிந்து கொண்டோம். அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவு நேர அமற்களில் இன்றியமையாத ஒன்றாக இருந்த பிரார்த்தனைகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம் . பல்வேறுபட்ட சந்தர்ப்ப துஆக்கள் மற்றும் பொதுவான துஆக்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் இரவு நேரத்திலே ஓதியுள்ளார்கள். அவற்றை நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரமழான் மாத நோன்பு கடமை பற்றிய தொடர் வசனங்களின் நடு வசனமாக அல்லாஹ் சூரா பகராவில் துஆக் கேட்பதைப்பற்றிப் பேசுகிறான். இதன் மூலம் ஏனைய காலங்களை விட குறிப்பாக ரமழானில் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனைகள் புரிய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் சொல்கிறான்:
وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ
மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால்,
“நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்;
என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்).
எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும்.
என்மீது நம்பிக்கை கொள்ளட்டும்.
அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”
(அல்குர்ஆன் : 2:186)
இஷாவுடைய தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் உறங்கத் தயாரானால் அதிலே பல்வேறு ஒழுங்கு முறைகளைப் பேணுவார்கள். இன்ஷா அல்லாஹ் அவை பற்றி “உறங்கச் சொல்லும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகளும். கேட்க வேண்டிய பிரார்த்தனைகளும்.” என்ற தலைப்பில் தனியாக விளக்குகிறேன்.
1) இரவு நேரப் பிரார்த்தனையைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் பொதுவாக சொன்ன செய்தி:
سَمِعْتُ النبيَّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ: إنَّ في اللَّيْلِ لَسَاعَةً لا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ، يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِن أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إلَّا أَعْطَاهُ إيَّاهُ، وَذلكَ كُلَّ لَيْلَةٍ.
صحيح مسلم
الصفحة أو الرقم: 757 | خلاصة حكم المحدث : [صحيح]
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக அந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்
இச்செய்தியுனூடாக இரவு நேரத்தைப் பிரார்த்தனைக்கு தகுந்த நேரமாக, பிரார்த்தனைகள் அங்கிகரிக்கப்படும் நேரமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு அடையாளப் படுத்துகின்றார்கள். எனவே இரவு நேரத்தில் அதிகமாக நாம் இறைவனிடம் கையேந்த வேண்டும்.
அல்லாஹ் முஃமின்களின் பண்பாகச் சொல்கிறான்:
تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا
(இரவு நேரத்தில்) அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.
திருக்குர்ஆன் 32:16
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, “கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1388.
2) இரவில் தூக்கத்திலிருந்நு விழிப்பு வருகின்றவருக்கு கிடைக்கும் வாய்ப்பு:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘யார் இரவில் விழித்து
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
الْحَمْدُ لِلَّه
وَسُبْحَانَ اللهِ
وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله اَللّهُمَّ اغْفِرْ لِيْ
பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது.
என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும்.
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1154.
அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
3) தஹஜ்ஜத் நேரத்தில் நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனைகள்.
1: இரவுத் தொழுகையில் நபிகளார் கேட்ட பிரார்த்தனை:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்.
اللهُمَّ! رَبَّ جَبْرَائِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ “
“என்று கூறுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.(
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1418.
2: இரவுத் தொழுகையில் ஸுஜுதில் நபிகளார் கேட்ட பிரார்த்தனை :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள்.
اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
பொருள்:
இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா!
உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.
ஸஹீஹ் முஸ்லிம் : 839.
3: இரவில் கண்விழித்ததும் நபிகளார் கேட்ட பிரார்த்தனை :
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
اَللّهُمَّ لَكَ الْحَمْد
இறைவா உனக்கே புகழனைத்தும்
أَنْتَ نُور السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ
நீயே வானங்கள்
பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளி ஆவாய்
وَلَكَ الْحَمْد
உனக்கே புகழனைத்தும்
أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ.
வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றை நிர்வகிப்பவன் நீயே
وَلَكَ الْحَمْدُ
உனக்கே புகழனைத்தும்
أَنْتَ الْحَق
ُّ நீ
உண்மையானவன்
وَوَعْدُكَ حَق
ٌّ உன் வாக்கு உண்மையானது
وَقَوْلُكَ حَق
ٌّ உனது கூற்று உண்மை
وَلِقَاؤُكَ حَق
உன் சந்திப்பு உண்மை
وَالْجَنَّةُ حَق
ٌّ சொர்க்கம் உண்மை
وَالنَّارُ حَق
ٌّ நரகம் உண்மை
وَالسَّاعَةُ حَق
ٌّ மறுமை நாள் உண்மை
وَالنَّبِيُّوْنَ حَق
ٌّ நபிமார்கள் உண்மையாணவர்கள்
وَمُحَمَّدٌ حَق
ٌّ முகம்மது நபி ஸல் அவர்கள் உண்மையானவர்
اَللّهُمَّ لَكَ أَسْلَمْت
ُ இறைவா உனக்கே அடி பணிந்தேன்
وَعَلَيْكَ تَوَكَّلْتُ
உன்னையே சார்ந்துள்ளேன்
وَبِكَ آمَنْتُ
உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன்
وَإِلَيْكَ أَنَبْتُ
உன்னிடமே திரும்புகிறேன்
وَبِكَ خَاصَمْتُ
உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுகிறேன்
وَإِلَيْكَ حَاكَمْتُ
உன்னிடமே நீதி கேட்பேன்
فَاغْفِرْ لِي
எனவே என்னை மன்னிப்பாயாகْ
مَا قَدَّمْت
நான் முந்திச்செய்த ஒன்றையும்
ُ وَمَا أَخَّرْتُ
நான் பிந்திச் செய்த ஒன்றையும்
وَمَا أَسْرَرْت
நான் இரகசியமாக செய்த ஒன்றையும்
وَمَا أَعْلَنْت
நான் பகிரங்கமாக செய்த ஒன்றையும் மன்னிப்பாயாக..
ُ أَنْتَ الْمُقَدّمُ
நீயே என்னை மறுமையில் முதலில்
எழுப்புகிறவன்
وَأَنْتَ الْمُؤَخّر
ُ நீயே என்னை இம்மையில் இறுதியில் அனுப்பியவன்
لاَ إِلهَ إِلاَّ أَنْت
َ உன்னைத்
தவிர வணக்கத்துக்குரியவன்
வேறு யாரும் இல்லை
(ஸஹீஹ் புகாரி:6317 அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்)
أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.
திருக்குர்ஆன் 32:19
4: தூங்கி எழுந்ததும் நபிகளார் ஓதிய பிரார்த்தனை :
‘நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 183.
5: சூரா நிஸாவின் இருதி வசனங்களை தொடர்ந்து ஓத வேண்டிய பிரார்த்தனை :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எப்படித் தொழுகிறார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர்ப் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு உணவுத் தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவிட்டு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்களது குறட்டைச் சப்தத்தை வைத்து அவர்கள் உறங்குகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.- பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்று தொழுதார்கள். அவர்கள் தமது “தொழுகையில்”அல்லது “சஜ்தாவில்” பின்வருமாறு கூறலானார்கள்:
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا
யா அல்லாஹ்..! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக.
وَْ فِي بَصَرِي نُورًا
என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.
وَ فِي سَمْعِي نُورًا
என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.
وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا ,
என் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக
وَ فَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا
எனக்கு மேலயும் எனக்கு கீழயும் ஒளியை ஏற்படுத்தி விடு
وَ أَمَامِي نُورًا وْ خَلْفِي نُورًا
எனக்கு முன்னாலும் எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்தி விடுவாயாக
واجْعَلْ لِي نُوراً
எனக்கு எல்லா திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக
(ஸஹீஹ் முஸ்லிம் : 1405.
(ஸஹீஹ் புகாரி6313 )
இந்த துஆவை நபிகளார் ஓதிய சந்தர்பத்தில் கருத்து முரண்பாடுகள் உள்ளது. தொழுகையில் சுஜுதில் அல்லது தூங்கி எழுந்து நாம் இந்த துஆவை ஓதலாம்.
ரமழான் எதிர்பார்க்கும் மாற்றம் இறையச்சம் அந்த இறை அச்சம் உள்ள இடம் எமது உள்ளம் அது சீராகி விட்டால் எல்லாம் சீராக ஆகி விடும் அது சீர் கெட்டு விட்டால் எல்லாம் சீர் கெட்டு விடும். எனவே நாமும் இப்பிரார்த்தனையை மனனமிட்டு ஓத முயற்சிக்க வேண்டும்.
أَفَمَن شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِ ۚ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ
- யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவரா (வழிகெட்டவர்)? அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.
திருக்குர்ஆன் 39:22
يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ
அல்லாஹ் தான் நாடியோருக்கு அவனின் ஒளியை நோக்கி வழிகாட்டுகின்றான்.
✍நட்புடன்:
இன்திகாப் உமரி
அட்டுலுகம
2021/04/29