இன்று உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவ சமயத்துக்கு அடுத்தபடியாக 160 கோடி மக்களால் பின்பற்றப்படும் மார்க்கமாக தீனுல் இஸ்லாம் உள்ளது. உலகின் இரண்டாவது பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தும் கூட இன்று பல நாடுகளில் இஸ்லாமும், முஸ்லிம்களும் குரிவைத்துத் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் அறிவீர்கள், அதிலும் குறிப்பாக வேதக்காரர்கள் இவ்விடயத்தில் திட்டமிட்டு செயல்படுவதை அன்றாட செய்திகளினூடாக நாம் அறிகிறோம். இதற்கான காரணம் தான் என்ன.?
வேதம் வழங்கப்பட்டோரைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகளில் இக்கேள்விக்கான பதிலை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் :
1 ) வேதம் வழங்கப்பட்டோர் நாம் அவர்களின் மதத்தைப் பின்பற்றும் வரை அவர்கள் எம்மை பொருந்திக் கொள்ளவே மாட்டார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்.
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ
(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) “அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)” எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.
(அல்குர்ஆன் : 2:120)
2) அவர்கள் ஏன் எம்முடன் முரண்படுகின்றார்கள்.? அவர்களின் குறிக்கோள் தான் என்ன..?
அல்லாஹ் சொல்கிறான்.
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (“இதுதான் உண்மையான வேதம்” என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
(அல்குர்ஆன் : 3:19)
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ
அவர்கள் தங்களிடம் வேதம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை.
(அல்குர்ஆன் : 42:14)
وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ
1: வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள்.
2: அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான்.
அல்லாஹ் அதிகமான இறைத்தூதர்களை யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் இருத்தே அனுப்பினான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களின் சமூகத்திலிருந்தே வர வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் அல்லாஹ் வரம்பு மீறிய அந்த சமூகத்தாரை புறக்கணித்து குறைஷிகளிலிருந்து இறுதித்தூதரை வரவைத்தான். இதுவே அவர்களின் பொறாமைக்குரிய முதல் காரணியாக அமைந்தது இதன் விளைவாக அறிந்து கொண்டே இறுதித் தூதரையும் அவரின் சமூகத்தாரையும் புறக்கணித்து நடப்பதை கொள்கையாக கொண்டார்கள்.
وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வருகிறது. ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள்.
(அல்குர்ஆன் : 5:68)
اَ لَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْۘ اَ لَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ
எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (நமது தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தாம் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:20)
இன்று உலகெங்கிலும் நிகழும் இஸ்லாத்திற்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களின் இலக்கு இஸ்லாத்தை விட்டு முஸ்லிம்களைத் தூரமாக்குவது தான் என்பதை தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விட்டான்.
3) நாம் செய்ய வேண்டியது என்ன.?
فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ
ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 2:109)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا وَدُّوْا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ
நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
(ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள்.
அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை.
நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)
(அல்குர்ஆன் : 3:118)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَـتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْـكُفَّارَ اَوْلِيَآءَ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர்களாகவும்) எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.)
(அல்குர்ஆன் : 5:57)
لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 3:186)
வேதம்முடையோரும் இறை நிராகரிப்பாளர்களும் அவர்களின் திட்டங்கள் நிறைவேறும் வரை முஃமின்களின் உயிர்களைப் போக்கியும். வீண் பலிகளை சுமக்கச் செய்தும், இழி சொற்களைக் கொண்டும் எம்மைத் துன்புறுத்துவார்கள். நாம் அல்லாஹ்வின் உதவி எம்மை வந்தடையும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ
(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!
(அல்குர்ஆன் : 14:42)
3) யூதர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவார்களா..??
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (ஒரே நேரத்தில்)
பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5383.
வேதமுடையோரில் யூதர்கள் வித்தியாசமான குணமுடையவர்கள். யாருக்குக் கீழும் வாழ விரும்பாதவர்கள். அனைவரையும் நாமே ஆள வேண்டும் என்ற அகங்காரம் கொண்டவர்கள். இத்தகைய பண்புகள் அவர்களை பொறாமைக்காரர்களாகவே வாழச் செய்துள்ளது. இன்று இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் செயல்பாடுகளுக்குக் காரணமே பொறாமை தான்.
4) பொறாமையின் விபரீதமும் படிப்பினையும்.
எமது தந்தை ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி வானவர்கள் அவருக்கு ஸுஜூத் செய்ய ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் தற்பெருமை பேசி ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூது செய்ய மறுத்து விட்டான், அன்று தொடக்கம் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றவனாக இப்லீஸும் அவனின் சந்ததியினரும் ஆகிவிட்டார்கள்.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) “நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?” என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) “நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்திருக் கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)” என்று (இறுமாப்புடன்) கூறினான்.
(அல்குர்ஆன் : 7:12)
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ
“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக!
திருக்குர்ஆன் 17:62
இப்லீஸ் தற்பெருமை பேசிப் பொறாமையை வெளிப்படுத்தினான். இது தான் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த முதல் பாவம் என தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கியுள்ளார்கள்.
பின்னர் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவர்களுக்கான சிறந்த வாழ்கைத் துணையாக ஹவ்வா (அலை) அவர்களைப்படைத்து இருவரையும் சுவனத்திலே வாழச் செய்தான்.
وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ
“ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்” (என்று கூறினான்.)
(அல்குர்ஆன் : 7:19)
சுவனத்தில் அவர்களுக்கு அனைத்து வித சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு தடை அந்த மரத்தை நெருங்கக் கூடாது என்பது தான். பொறாமை கொண்ட இப்லீஸ் அவர்களுக்குத் தவறான ஆசையை ஊட்டி அவ்விருவரையும் அல்லாஹ்வின் வரம்பை மீறச்செய்தான் .
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وٗرِىَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰٮكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَـكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ
(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி “(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ, அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை” என்று கூறியதுடன்,
(அல்குர்ஆன் : 7:20)
وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ
“நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்” என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,
(அல்குர்ஆன் : 7:21)
فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ
அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் சென்றடைய வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் “அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.
(அல்குர்ஆன் : 7:22)
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
(அதற்கு அவர்கள்) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
(அல்குர்ஆன் : 7:23)
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ
(அதற்கு இறைவன் “இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 7:24)
قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ
(அன்றி) “அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்” என்றும் கூறினான்.
(அல்குர்ஆன் : 7:25)
வேதமுடையோர் யார்..? அவர்களின் பண்புகள் என்ன.? நாம் எவ்வாறு அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும்.? அவர்கள் ஏன் எம்மை எதிர்கின்றார்கள் என்ற பல விடயங்களை அவர்களின் உள்ளத்தை அறிந்த ரஹ்மான் எமக்குத் தெளிவாகச் சொல்லி விட்டான். குறிப்பாக இப்லீஸ் எம்மீது கோபமடைய எப்பண்பு காரணமாக இருந்ததோ அதே பொறாமை வேதக்காரர்களிடம் இருப்பதாக அல்லாஹ் சொல்லி விட்டான் . எனவே இவர்களின் சதிவளைகளில் சிக்கி நாளை மறுமை வாழ்வை பரிகொடுத்துவிடாதிருக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்.
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம்.
அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 7:27)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 3:102)
குறிப்பு:
இஸ்லாத்தை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் நிர்பந்தமில்லை, எமது மார்க்கம் எமக்கு நிராகரிப்பாளர்களின் மார்க்கம் அவர்களுக்கு. எனவே பிற சமயங்களை மதித்து, பிறர் வணங்குபவற்றை ஏசாது நாம் கொண்ட கொள்கையில் (இஸ்லாத்தில்) தடம்பிரலாது உறுதியாக இருக்கவே அல் குர்ஆன் போதிக்கின்றது.
நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)
(அல்குர்ஆன் : 3:118)
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை
2021/06/23