M.A.Hafeel
சன்மார்க்கப் பண்பாட்டுத் துறைகளில் பயங்கரமானதொரு பின்னடைவை எதிர் நோக்கிய காலப்பிரிவாக கி.பி. 18ம் நூற்றாண்டு காணப்பட்டது. அரசியல் வீழ்ச்சியோடு அறிவுத் துறையிலும் முஸ்லிம் உலகம் தேக்க நிலையை அடைந்ததிருந்தது. அப்போதைய இந்தியாவில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் ஷாஹ் வலியுல்லாஹ்வின் வகிபாகம் முக்கியமானது.
ஷாஹ் வலியுல்லாஹ் தமது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களின் நிழலில் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அவர் வாழ்ந்த காலப்பகுதியில், அவரது முயற்சிகளுக்கு ஏராளமான தடைகள் இருந்தன. எனினும், இளைஞர்களை தம் பக்கம் கவர்ந்து, அவர்களின் உதவியுடன் மறுமர்ச்சிப் பணிகளை இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் மேற்கொண்டார்.
சூபிசம், அறிவு, ஆன்மா சட்டம் போன்ற கருத்துக்களை அவரது சிந்தனை உள்ளடக்கி இருந்ததால்,மேறிகிலும் இவர் படிக்கப்படத்துவங்கினார். எனவே, இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அறிவு, ஆன்மிக, பொருளாதார, சமூக, அரசியல் எனப் பரந்துபட்ட பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் ஓர் எழுச்சி மிக்க இஸ்லாமிய மறுமலர்ச்சியின் உதயத்திற்கு இவரின் பணி பல் வகையில் துணை நின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.