Featured Posts

ஈமானின் முதல் அங்கம்

ஈமானின் முதல் அங்கம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவது.

16- அபூதாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி (ஸல்)அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம்,அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சிக் கூறுவேன்,என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீர் புறக்கணிக்கப்போகின்றீரா? எனக்கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்)அவர்கள் ஒரு புறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்) என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன், என்று கூறியதும்,இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று,(அல்குர்ஆன்-9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(புகாரி:1360 அல் முஸய்யப் பின் ஹஸ்ன்(ரழி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *