அண்டை வீட்டாருக்கு உதவுவது விருந்தினரை உபசரிப்பது நல்லதை பேசுவது அல்லது மௌனமாய் இருப்பது ஈமானின் ஒரு கிளையாகக் கருதுதல்
29- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6018: அபூஹூரைரா(ரலி)
30- நபி(ஸல்)அவர்கள் பேசிய போது என் காதுகளால் கேட்டேன். என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளிக்கு தமது கொடையை கண்ணியமாக வழங்கட்டும் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்ளாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்கு தர்மமாக அமையும். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று கூறினார்கள்.
புகாரி-6019: அபூஷூரைஹ் அல் அதவீ(ரலி)