92- (இறந்து விட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர் ஆவோம்.(ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி) இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு என்று கேட்டபோது அல்லாஹ் நீங்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லையா? என்று கேட்டான். அவர்கள் ஆம், (நம்பிக்கைக் கொண்டுள்ளேன்) ஆனாலும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன் என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன்.
புகாரி-3372: அபூஹூரைரா(ரலி)