124- (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது) தூய மனம் படைத்த உம்முடைய குழவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214 ஆவது) இறைவசம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள் யார் இவர்? என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கைச் செய்கிறேன் என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா? என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள், அவனுமே அழியட்டும் எனும் (111 ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அழியட்டும் அபூலஹபின் இருகரங்கள்……
புகாரி- 4971: இப்னு அப்பாஸ்(ரலி)