213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏன் ஏற்படுத்தக்கூடாது? என்று கூற உடனே பிலால் (ரலி) அவர்களிடத்தில் பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும் என நபி (ஸல்) கூறினார்கள்.
214- (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருப்பை மூட்டுவோம் என்றார். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) ஏவப்பட்டார்கள்.