216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது
புகாரி-608: அபூஹுரைரா (ரலி)