350– தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
351– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு (ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்று பதில் கூறினர். அவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்களை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்கு தவறி போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.