Featured Posts

பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…

406– நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தின் போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர உபரியான இரவு தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுதுக்கொண்டு இருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.

புஹாரி-1000: இப்னு உமர் (ரலி)

407– நபி (ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

புகாரி-1093 ஆமிர் பின் ரபிஆ (ரலி)

408– அனஸ் (ரலி) ஸிரியாவிலிருந்து வந்த போது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ஐநூத்தம்ர் என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை நான் பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று விடையளித்தார்கள்.

புகாரி-1100. அனஸ் பின் ஸிரின் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *