கடமையான தொழுகைக்குப் பின்னர் முன்னர் தொழும் ஸுன்னத்துகள்.
423– நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி (ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.
புஹாரி :1180 இப்னு உமர் (ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library