Featured Posts

வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.

700. நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘ஆம்’ என்றார்.

புஹாரி :1984 முஹம்மது பின் அப்பாத் (ரலி).

701. ”உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1985 அபூஹுரைரா (ரலி).

702. ”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (‘உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.

புஹாரி :4507 ஸலாமா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *