722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. ‘இம்மாதம்’ என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!” என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.’நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு ‘இம்மாதம்’ என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘ஸல்த்’ என்பவர் கூறவில்லை. ‘ஷஅபானின் கடைசி’ என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.