754. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு!’ எனக் கூறினார்கள். ளுபாஆ (ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அவர்களின் துணைவியாராவார்.
நிபந்தனையுடன் இஹ்ராமணிதல்.
புஹாரி : 5089 ஆயிஷா (ரலி).