766. நபி (ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும்போது நான் அங்கு வந்தேன். அப்போது அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடி விட்டீரா?’ எனக் கேட்க, நான் ‘ஆம்!” என்றேன். ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?’ என அவர்கள் கேட்டதும் ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காக!” என்றேன். உடனே அவர்கள், ‘நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாவையும் வலம் வாரும்!” என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தாரின் பெண்களில் (மஹ்ரமான) ஒருவரிடம் வந்தேன். அவர் என்னுடைய தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தேன். இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறி வந்தேன்! உமர் (ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், ‘நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி (ஸல்) அவர்கள் பலிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகிறது!” எனக் கூறினார்கள்.
இஹ்ராமிலிருந்து எப்பொழுது விடுபடுவது?
புஹாரி :1724 அபூமூஸா (ரலி).