922. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்து இப்னு ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் இளைஞன் விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘இறைத்தூதர் அவர்களே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸின் மகனாவார். என் சகோதரர் (அவரின் மரணத்தின் போது) என்னிடம் இதை வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரைப் போன்றே இருப்பதை நீங்கள் கவனியுங்கள்’ என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) கூறினார். அவ்விளைஞனிடம் தெளிவாக உத்பாவின் சாயலைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், ‘அப்தே! ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது!’ எனக் கூறினார்கள். பிறகு தம் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களிடம், ‘ஸவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்!” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு ஸவ்தா (ரலி) ஒருபோதும் அந்த இளைஞரைக் கண்டதில்லை.
923. தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.