960. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப்பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் எஜமானர்களுக்கு) ஒரே முறையில் முழுத் தொகையையும் செலுத்தி விட்டால் உன் எஜமானர்கள் உன்னை எனக்கு விற்றுவிட நான் உன்னை விடுதலை செய்து உனது வலாவை (வாரிசுரிமையை) நான் அடைந்து கொள்ள முடியுமா? (அதற்கு உன் எஜமானர்கள் சம்மதிப்பார்களா?) நீ என்ன கருதுகிறாய்? என்று கேட்டேன். உடனே பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் சென்று எனது நிபந்தனையை அவர்கள் முன் வைத்தார். அதற்கு அவர்கள் இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறினார்கள். அதை அறிந்த நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று விஷயத்தை கூறினேன். அவர்கள் என்னிடம் அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில் விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையெல்லாம் விதிக்கின்றார்களே! ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்தில் நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி மிக்கதும் (கட்டுப்படுத்தத் கூடியதும்) ஆகும் என்று கூறினார்கள்.
அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை.
புகாரி-2560: ஆயிஷா (ரலி)