Featured Posts

குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

985. ”நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!”

புஹாரி :2188 ஜைது பின் தாபித் (ரலி).

986. ”நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பதாகக் கணக்கிட்டு விற்கலாம்! அதை வாங்கியவர்கள் செங்காயாக புசிக்கலாம்!

புஹாரி :2191 ஸஹ்ல் பின் அபூஹத்மா(ரலி).

987. நபி (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார்கள்); அராயாக்காரர்களைத் தவிர. நபி(ஸல்) அவர்கள், அராயாக்காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்து கொள்ள அனுமதியளித்தார்கள்.

புஹாரி :2383 ரபீஉ பின் கதீஜ் (ரலி).

988. நபி (ஸல்) அவர்கள் அராயாவில் ஐந்து வஸக் அல்லது அதைவிடக் குறைந்த அளவிற்கு அனுமதி அளித்தார்கள். (675 கிலோ)

புஹாரி :2190 அபூஹூரைரா (ரலி).

989. ”நபி (ஸல்) அவர்கள் ‘முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். ‘முஸாபனா’ என்பது (மரத்திலுள்ள) பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் (கொடியிலுள்ள) திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதுமாகும்!”

புஹாரி :2171 இப்னு உமர் (ரலி).

990. ”நபி (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள். ‘முஸாபனா’ என்பது ஒருவரின் தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலுள்ள கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதுமாகும்! இவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!”

புஹாரி :2205 இப்னு உமர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *