1075. அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு கருணை காட்டி அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது?’ என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், போர்க் கைதிகளின் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்றார்கள். (உடனே) உமர் (ரலி), அப்படியென்றால் நீ சென்று அந்த இரண்டு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டு விடு” என்று கூறினார்கள்.
இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று
புஹாரி :5144 நாஃபிவு (ரலி).