1111. ‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை. திருடுவதில்லை. விபச்சாரம் செய்வதில்லை. உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை. நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை. எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். உடனே நாங்களும் அவ்வாறு நடப்போம் என்று அவர்களிடம் உறுதிமொழி எடுத்தோம்” என பத்ருப் போரில் பங்கெடுத்தவரும் அகபா உடன்பாடு நடந்த இரவில் பங்கெடுத்த தலைவர்களில் ஒருவருமான உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவித்தார்.
தண்டனையும் பரிகாரமும்.
புஹாரி:18 உபாதா பின் ஸாமித் (ரலி).