1672. ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் வர) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று (அவரைப் பற்றிச்) கூறினார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?’ என்று கேட்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! மக்கள் எவரின் அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்கிறார்களோ அவரே மக்களில் தீயவராவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)” என்றார்கள்.
அருவருப்பான பேச்சுகளைத் தவிர்த்தல்.
புஹாரி : 6054 ஆயிஷா (ரலி).