கோவை குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த பத்து வருடங்களாக சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஆனால் குற்றம் நிரூபிக்கப் படாத எவரும் ஜாமீனில் வெளிவந்து சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்ளலாம். அந்தவகையில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நடந்த ஒரு கருத்தருங்கம் பற்றிச் சகோதரர் . கோ.சுகுமாறன் அவர்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தார்.
வழக்கம்போல் நேசகுமார் என்ற பெயரில் எழுதும் நபர், “இன்று இவர்களுக்கு வாதிடினீர்கள் என்றால், நாளை வெளியே வந்து மீண்டும் அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழகமெங்கும் குண்டு வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று பின்னூட்ட ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார்.
முஸ்லிம்களெல்லாம் தீவிரவாதிகள்! இஸ்லாத்தின் இருப்பு தன்மத ஆதிக்கத்திற்கு சாவுமணி!! முஹம்மது நபியின் போதனைகள் இருக்கும்வரை தன் மத ஞானிகளின் பருப்பு வேகாது!!! என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருக்கும் இவரிடம் இத்தகைய மநுநீதியைத்தான் எதிர்பார்க்க முடியும் என்ற போதிலும், அப்பதிவுக்கு எனது பின்னூட்டமாக,
“நேசகுமார்,
அனைத்து சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படணும் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. சந்தேகத்தின்பேரில் குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டு சட்டப்படி நிரூபிக்கப்பட்டிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய தண்டனைக் காலத்தைவிட சற்று அதிகமாக சிறையில் இருப்பவர்கள் ஜாமீனில் விடுவிக்கப் படவேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.
ஜாமீனில் வெளியே வந்தால் மீண்டும் குண்டு வைப்பார்கள் என்பதெல்லாம் உங்களின் இந்துத்துவா பார்வையையே காட்டுகிறது.அது எப்படி ஐயா குஜராத்திலும்,ஒரிஸ்ஸாவிலும் இன்னும் பிறவிடங்களிலெல்லாம் மாபாதகம் செய்த இந்துத்துவா பரிவாரங்கள் மட்டும் அதிசயமாய் குற்றம் நிரூபிக்கப் படாமலேயே விடுவிக்கப் படுகிறார்கள்?
1991 இல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்த படுகொலைகளின் வழக்கு 16 ஆண்டு காலமாக நிலுவையில் அல்லது விசாரணையில் இருந்து வருகிறது; அதற்குப் பிறகு பாராளுமன்ற தாக்குதல் வழக்கு உலக சாதனையாக குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு தண்டனையும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.
அப்சல் குருவைத் தண்டிக்க விழித்துக் கொள்ளும் ‘கூட்டு மனசாட்சி’ ஏன் மற்ற குற்றவாளிகளைத் தண்டிக்க மட்டும் விழிக்க மறுக்கிறது? காஞ்சி சங்கராச்சாரியார் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டபோது பதை பதைத்து “வேண்டுகோளிட்ட நீங்கள், அவர் ஜாமீனில் விடப்பட்டதையும் இன்றும் அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதையும் கண்டித்திருக்கிறீர்களா?
நீங்கள் உண்மையில் நியாயத்தைப் பேசுபவராக இருந்தால், வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் உள்பட அனைவருக்கும் ஜாமீன் கொடுக்கக் கூடாது எனக் குரல் கொடுத்திருக்கலாமே?
மீண்டும் ஒருமுறை சொல்கிறோம், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சட்டப்படி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் சுமத்தப் பட்டவர்கள், சட்டம் வழங்கியுள்ள உரிமைப்படி ஜாமீனில் வந்து வழக்கைச் சந்திக்கட்டும் ! அது முஸ்ல
கோவை சிறைவாசிகள் குறித்த எனது பதிவிற்கான சுட்டி:
http://etheytho.blogspot.com/2006/04/follow-up.html
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டடை வழங்கப் பட்டுள்ளவர்கள் கூட பிணையில் வர முடிகிறது.
ஆனால் கோவை முஸ்லிம் சிறைவாசிகளில் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) கூட தாக்கல் செய்யவில்லை. குற்றப் பத்திரிக்கையின் எந்த இடத்திலும் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ அவர்களுக்கு எதிராக இல்லை. ஆனால் 10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி 16 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அப்பாஸ் என்ற சகோதரர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.
நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் பிணையில் வரமுடிகிறது. குற்றம் சுமத்தப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே இருப்பவர் பிணையில் வரமுடியவில்லை.
இரண்டாம் தரப்பினர் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள் இந்த இரு தரப்பினருக்கும் இடையில் இல்லை.