நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன்.
எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார். இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
பதிவுக்கும், படத்துக்கும் நெஜம்மாவே நோ கமெண்ட்ஸ்…!!!
:-(
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதிக்கு என்ன தொடர்பு? அவரது படம் இங்கெதற்கு?
அழகு,
டிஸ்க்ளைமர் போட மறந்து விட்டேன்.
மரைக்காயரின் பின்னூட்டத்தையே டிஸ்க்ளைமராகக் கருதவும். :-)
நல்லடிண்ணே,,,
மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்படுகிற நமது நாட்டில் ஜனாதிபதியாக இருந்தாலும், வேறு பதியாக இருந்தாலும் மதாதிபதிகளின் – குறிப்பாக – பார்ப்பனாதிபதிகளின் காலடியின் கீழ் தான் ‘அமர்ந்திருக்க’ வேண்டிய அவலம் உள்ளது.
தனிப்பட்ட தன் விருப்பு வெறுப்புகள், ‘காட்சிப்படுத்தல்’களை விடவும் தான் வகிக்கும் பொறுப்பு முக்கியமானது என்று உயர்பொறுப்புக்கு வரும் எவரும் உணர வேண்டும். அப்படி உணர்ந்திருந்தால் அப்துல்கலாம்கள் இப்படி அமரமாட்டார்கள்.
ஒரே ஒரு விதிவிலக்காக, ஜாஹிர் ஹூசேன் ஜனாதிபதியாக இருந்தபோதும் ஈத் தொழுகையில் கலந்து கொள்ள தாமதமாக வந்ததால் சாலையில் தனிமனிதனாகத் தொழ நேரிட்டது என்று அறிந்திருக்கிறேன்.
இந்தப்பதிவின் பொருளில், தன் பொறுப்பை தன் விருப்பு வெறுப்பு வென்றுவிடும் என்று உணர்ந்து தன்னை வெளியேற்றிக்கொண்ட நீதிபதியைப் பாராட்டலாம்.
ஆனால் இவ்வாறாக மத, இன, பக்தி சமாச்சாரங்கள் பொறுப்பையும் நீதியைத் தோற்கடித்த நிகழ்வுகள் எத்தனை, எத்தனையோ.. என்று எண்ணும் போது..!
//இந்தப்பதிவின் பொருளில், தன் பொறுப்பை தன் விருப்பு வெறுப்பு வென்றுவிடும் என்று உணர்ந்து தன்னை வெளியேற்றிக்கொண்ட நீதிபதியைப் பாராட்டலாம். ஆனால் இவ்வாறாக மத, இன, பக்தி சமாச்சாரங்கள் பொறுப்பையும் நீதியைத் தோற்கடித்த நிகழ்வுகள் எத்தனை, எத்தனையோ.. என்று எண்ணும் போது..! //
வாசகன்,
தனது அபிமானத்திற்குறியவருக்கு எதிராக அல்லது சாதகமாக தீர்ப்பெழுதத் தயங்கி தன்னை விடுவித்துக் கொண்ட செயல் ஒரு ‘நடுநிலை’ நீதிபதிக்கு அழகல்ல! தனது உள்மனச்சுமையைச் சொல்லி ஒதுங்கி கொண்டதை நேர்மை என்று பாராட்ட முடியவில்லை!
நீதிபதிகளின் தீர்ப்பைக் குறைசொன்னால், சொன்னவரை ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்று அலைக்கழிக்கும் சட்டம், நீதியைத் தரத் தயங்கும் நீதிபதியை என்ன செய்யப் போகிறது?
படத்திலுள்ளதுபோல் ஒரு நாட்டின் தலைமகன்களே மடாதிபதிகளிடம் தலைவணங்கி நிற்கும்போது, அப்பதவிக்குறிய மேன்மையும், நாட்டின் சட்டங்களும் தலைக்குணிந்துதானே நிற்கும்!
நீங்கள் சொல்வது சரிதான் நல்லடியார்.
தன் விருப்பு வெறுப்புக்கு மாறாக உண்மையை நிலைநாட்ட முடியாது என்று ஒரு கேசில் மட்டுமே உணர்வது எஸ்கேப்பிசம் தான்.
விஐபிகள் இல்லா மற்ற கேசுகளில் சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் அல்லவா!
தன் விருப்பு வெறுப்பை புறந்தள்ளி நீதியையும், அப்பதவிக்குரிய பொறுப்புணர்வையும் காப்பாற்ற இயலாதவர்கள் மொத்தமாக அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதே நேர்மையானது.
நாளை ஒரு நீதிபதி நான் “ஜெ” ரசிகன் – எனவே அவர்களை பற்றிய வழக்கை விசாரிக்க முடியாது என்று சொன்னால் என்ன ஆகும்?