Featured Posts

இமாம்கள் – “பேரைச் சொன்னாலே அதிருதுல’’

இமாம் பசந்த் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நம்நாட்டு மாம்பழ வகைகளுள் ஒன்றின் பெயர்! அதுவன்றி தற்போதெல்லாம் ‘இமாம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்குக் கசக்கிறது! குறிப்பாக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகக் கருத்து சொல்லும் கசப்பான இமாம்கள் பற்றி தெளிவு படுத்தும் முயற்சி !

 

டெல்லி ஷாஹி இமாம்:

அவ்வப்போது இஸ்லாத்தை இந்திய அரசியலுக்குள் குழப்பி கருத்துச் சொல்லிவரும் இவர் எமர்ஜென்ஸியின்போது நிழல் பிரதமராக இருந்த சஞ்சய் காந்தி நடத்திய ஜுமா மசூதித் துப்பாக்கிச் சூட்டால் காங்கிரஸுக்கு எதிரியானார். பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடச் சொன்னார். இப்போது பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்களுக்குக் கசப்பான இமாம்! மும்பையின் பால் தாக்கரேயைக் குறை சொன்னால் பதிலுக்கு இவரை ஒப்பிட்டு விமர்சிக்க மட்டுமே உதவும் ஆபத்பாந்தவமான இமாம் !

இமாம் அலி:

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு, என்கவுண்டர் கொலை செய்யப்பட்ட இமாம் அலிக்கு அவருடைய பெயர் போலீஸுக்குக் கசப்பானது!

ஆக, உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பூச்சாண்டி காட்ட, பெயரில் மட்டும் இமாமைக் கொண்ட மேற்கண்ட மூன்று இமாம்கள் போதும். இவர்களன்றி, சானியா மிர்ஸா முதல் தஸ்லிமா மீதுவரை அவ்வப்போது ‘ஃபத்வா’ கொடுக்கும் திடீர் இமாம்களும் சமீபகாலங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறார்கள்!

யார் இந்த இமாம்கள்? உண்மையில் இமாம்களுக்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம், அவர்களின் அதிகாரங்கள் யாவை? அதிகார வரம்பெல்லை எவை என்ற தகவல்களை அறிந்து கொண்டால், இமாம்கள் மீதான அச்சம்?! நீங்கும் என்ற நோக்கில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தஸ்லிமா நசுரின் விவகாரத்தில், ஒருசில திடீர் இமாம்களின் பத்வாக்களை பிரதானப்படுத்தி இஸ்லாத்தை வசைபாடும் கருத்துச் சுதந்திரவாதிகளின் எதிர்பார்ப்பு என்னவென்றால், தஸ்லீமா நசுரினின் கருத்துக்கு எதிராக இமாம்கள் ஃபத்வா கொடுக்கக்கூடாதாம்!

யாராவது உங்கள் தாயைப் பற்றி தவறான கருத்துச் சொன்னால், பதிலுக்கு நீங்களும் எதிர்கருத்து மட்டுமே சொல்ல வேண்டுமாம்! மாற்றமாக நடந்து கொண்டால் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவராம் ! அதாவது கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமாம்! என்னே ஒரு நியாயம்! என்னே ஒரு எதிர்பார்ப்பு!

(தஸ்லீமா நசுரீனும் சல்மான் ருஷ்டியும் அப்படி என்னதான் பிரமாதமானக் கருத்தைச் சொல்லி விட்டார்களோ தெரியவில்லை! :-) ருஷ்டியின் நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும் ; அவருடைய ஆங்கில(!) அறிவு.

மனம்போன போக்கில் கருத்துக்களைச் சொல்லும் ஊடகங்களைத் தங்கள் காலடியில் அடக்கி வைத்திருக்கிறோம் என்ற திமிரில்தானே இஸ்லாத்திற்கு எதிராக எதையும் சொல்லி விட்டு, கருத்துச் சுதந்திரம்/கத்தரிக்காய் சுதந்திரம் என்று கூக்குரல் இடுகிறார்கள்.

சரி விசயத்திற்குச் செல்வோம். ஓர் இஸ்லாமிய அரசில், இமாம் என்பவர் இறைபக்தியிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை நன்கு ஆராய்ந்து அறிந்த எவரும் இமாம் ஆக இருக்கலாம் .

அரேபியாவில் இஸ்லாம் பரவத் தொடங்கிய காலத்தில், அந்தந்த பகுதிக்கு அமீர் (தலைவர்) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவரே இமாம் ஆக இருந்தனர். அவர்களின் சமூகம் விஸ்தரிக்கப்பட்டு மாநிலம்,நாடு என்று எல்ல
ைகள் வரையறுக்கப்பட்ட காலங்களில்,இமாம்களே கலீஃபா எனும் ஜனாதிபதி ஆகவும் இருந்தனர் .

நாளடைவில் பெரும்பாலான அரபு நாடுகள் காலனியாதிக்கச் சூழ்ச்சியில் வீழ்ந்து இஸ்லாமியத் தலைமைத்துவம் சிதைக்கப்பட்ட பிறகு அந்தந்த நாட்டுத் தலைவர்கள், தங்களை ஷெய்க் என்றோ மலிக் என்றோ சுல்தான் என்றோ அழைத்துக் கொண்டனர் . இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள், தங்கள் பொறுப்பிலிருந்து விலகி ஆடம்பரச் சுகபோகத்தில் வீழ்ந்த பிறகு, இமாம்களாக இருந்து மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் இமாம்களுக்கான இஸ்லாமிய இலக்கணத்திலிருந்து விலகினர் .

இன்னொருபக்கம், முஹம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நபித்தோழர்களில் சிலருக்குள் எழுந்த கருத்து மோதல்கள் அதிகார மோதல்களாக உருமாறி இஸ்லாத்தின் வளர்ச்சியில் பின்னடைவுகள் ஏற்பட்டன .

இச்சூழலில் நபிகளாரின் பெயரில் இஸ்லாமிய எதிரிகள் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பரப்பி இஸ்லாத்தின் அடிப்படை விசயங்களில் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.

ஒருபக்கம் வழிநடத்த வேண்டிய ஆட்சியாளர்களின் அதிகாரப்போட்டி, இன்னொரு பக்கம் இஸ்லாமிய எதிரிகளின் நயவஞ்சகச் சூழ்ச்சியினால் முஸ்லிம்களிடம் நிலவிய உண்மையான இஸ்லாம் பற்றிய குழப்பங்கள். இவற்றிலிருந்து எதிர்கால முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் ஒரேவழி திருக்குர்ஆனுக்கு முரணின்றி நபிகளாரின் வழிகாட்டல்களை ஆதாரமாகக் கொண்டு ஹதீஸ்களைத் தொகுக்க வேண்டிய பொறுப்பை முன்வந்து ஏற்று ஹதீஸ்களை தொகுத்தவர்களுள் நான்கு இமாம்கள் பரவலாக அறியப்படுகிறார்கள் .

இந்நான்கு இமாம்கள் தொகுத்த ஹதீஸ்களுடன் வழிகாட்டல்களை ஏற்று அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்கள் அந்தந்த இமாம்களின் பெயரால் தனித்தனி மத்ஹப் எனும் சட்டப் பிரிவுகளை உருவாக்கிக் கொண்டனர் .

(மத்ஹப்களைப் பின்பற்றிய பிற்கால முஸ்லிம்களில் சிலர் இமாம்கள் மூலமாகக் கொண்ட குர்ஆனையும் ஹதீஸையும் முன்னிறுத்தாமல், இமாம்களின் புரிந்து கொள்ளல்களுடன் கூடிய விளக்கக் குறிப்புகள் அடங்கிய மத்ஹப்களை முன்னிறுத்தியதைத் தற்கால அறிஞர்கள் சிலர் எதிர்த்தும் ஏற்றும் வருகிறார்கள் என்பது வேறு விசயம்.)

ஆக, இமாம் என்பவர் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் அனைத்து முஸ்லிம்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்க அறிஞரே. அந்த வகையில்தான் இஸ்லாத்தைப் புரிந்து கொண்ட ஆனால் இஸ்லாம் ஆட்சி நடக்காத நாட்டிலிருக்கிறோம் என்பதை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் ஃபத்வாக்களை வழங்கி இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளுக்குத் தீனி போடுகிறார்கள்.

இஸ்லாமியச் சட்டமோ ஆட்சியோ நடைமுறையில் இல்லாத நிலையில் மாற்றாரை அதிர வைக்கும் ஃபத்வாக்களால் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் வலுப்பெறுமே தவிர, இஸ்லாத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை ஃபத்வா வழங்கும் இமாம்கள் உணர வேண்டும் . நடைமுறைச் சாத்தியமில்லாத வெற்று ஃபத்வாக்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.

அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும் இமாம் என்று ஒருவரும் தற்போது இல்லை! இஸ்லாமிய ஆட்சி நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படும் ஈரான் தவிர, எங்கும் ஃபத்வாக்கள் செயல்படுத்தப் படுவதில்லை! ஆகவே, இனியும் ஊடகங்கள் அலறியடித்துக் கொண்டு பிரதானப்படுத்தும் இமாம்களைக் கண்டு யாரும் அதிர வேண்டாம்!

4 comments

  1. //நாளடைவில் பெரும்பாலான அரபு நாடுகள் காலனியாதிக்கச் சூழ்ச்சியில் வீழ்ந்து இஸ்லாமியத் தலைமைத்துவம் சிதைக்கப்பட்ட பிறகு அந்தந்த நாட்டுத் தலைவர்கள், தங்களை ஷெய்க் என்றோ மலிக் என்றோ சுல்தான் என்றோ அழைத்துக் கொண்டனர் . இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள், தங்கள் பொறுப்பிலிருந்து விலகி ஆடம்பரச் சுகபோகத்தில் வீழ்ந்த பிறகு, இமாம்களாக இருந்து மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் இமாம்களுக்கான இஸ்லாமிய இலக்கணத்திலிருந்து விலகினர்//

    அப்பட்டமான உண்மை சொன்னீர்!

  2. very good posting. keep posting

  3. பொய், பித்தலாட்டம், பொம்பளை விசயத்திற்கு பெயர்போன ஜமாஅத் தவ்ஹிது ஜமாஅத்தாகும். இதை மறுப்பதற்கு ஜாக் ஜமாஅத்தாலும் முடியாத விசயமாகும். கூலிக்கு இஸ்லாமியப்பணி செய்யலாமா? கூலிக்கு மாரடிக்கலாமா என்று சுன்னத் ஜமாஅத்தினரை கேட்டுக்கொண்டே, இது மார்க்கத்தில் உண்டா என்று வீரவசனம் பேசிக்கொண்டே தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பீ.ஜே வுக்கு கூலி கொடுத்த ஜமாஅத் ஜாக் ஜமாஅத்தாகும். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? சொந்தப்பணம், பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தையா விற்றுக்கொடுத்தார்கள்? பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தை பயன்படுத்த ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தொண்டர்களுக்கு உரிமை கிடையாது. ஏன் என்றால் அவர்களின் தந்தை, பாட்டன், பூட்டன், முப்பாட்டெனெல்லாம் அறியாமையில் மூழ்கியவர்கள். ‘ஷிர்க்’ செய்தவர்கள். சொத்து மட்டும் இனிக்குமா? என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயரை கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கசப்பது மட்டுமல்ல கதி கலங்குகிறது. அறியாமையில் மூழ்கியிருந்தவர்கள் எப்படி நேர்மையாக சம்பாதித்து இருக்க முடியும் என்று கேட்கும் ‘சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை’ கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தொடை நடுங்குகிறது. சாதாரணமாக ‘சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை’ கேட்கும்போதே இப்படியென்றால் ‘மத்ஹபுகளான நான்கு இமாம்கள் பெயரை கேட்கும் போது சொல்லவா வேண்டும்.

    ரிபாயி

  4. Assalamun alaikum
    the great companions of nabi salallahu alahi wasallam never get any consideration for their contribution s to Islam. Imam malik,hanbal,shaafee,abuhanifa,bukhari muslim and the chain of Imams never ended! Insha Allah up to the last day these kind of imams will continue and sacrifice their life to Islam. No doubt those imams are expect rewards only from ALLAH !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *