Featured Posts

நல்லடியார் புராணம் (அறிமுகம்)

கடந்த மூன்று வருடங்களாகத் தமிழ்மணத்தின் வாசகனாகவும் பதிவனாகவும் இருந்த என்னை, இந்த வாரம் நட்சத்திரப் பதிவராகத் தமிழ்மணத்தில் எழுதப் பணித்துள்ளார்கள். தமிழ் இணைய தளங்களில் அள்ளித் தெளிக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்கு எனக்குத் தெரிந்த, நான் மெய்யென நம்பியவைகளை ஆதாரங்களுடன் பதிலாக எழுதிய திருப்தியைவிட அவதூறு பரப்பியவர்களால் இஸ்லாத்தை மேலும் ஆய்வு செய்வதற்கும் இன்னும் நன்கு அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பைப் பெற்றதில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது!.

தமிழ்மணம் மூலம் ஓரளவு அறியப்பட்டாலும் சத்யமார்க்கம், திண்ணை,தமிழோவியம் ஆகிய தளங்களிலும் எழுதும் வாய்ப்புகள் கிடைத்தன. தஞ்சை முஸ்லிம்களைப் பற்றிக் காழ்ப்புணர்வுடன் மலர்மன்னன் தமிழ் சிஃபியில் தொடராக எழுதியபோது,அதற்கு மறுப்பெழுதி அனுப்பியதைக் காலம் கடந்து பிரசுரிக்க முன்வந்தார்கள்.இவையே இணைய ஊடகங்களுடனான எனது தொடர்பு.

நன்கு பரிச்சயமானவர்களைப் பற்றியே அவதூறாக எழுதத் துணிந்தவர்கள், பலருக்கும் பரிச்சயமில்லாத விசயங்களில் எந்தளவுக்கு வரலாற்றுப் புனைவும், அவதூறும் செய்யத் துணிவர் என்பதை உணர்ந்தே எனது பதிவுகளில் திரித்தல்களையும் புரட்டல்களையும் நானறிந்தவற்றைக் கொண்டு தோலுரித்துக் காட்ட முயன்றதன் விளைவே எனது வலைப்பூ பிரவேசம்.

தமிழில் வலைப்பூக்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு இணைய தளங்கள் புத்துணர்வு பெற்றுள்ளன. முன்பெல்லாம் இணைய தளங்களில் எழுதப்படுபவை அந்தந்தத் தள உரிமையாளரின் கருத்தைப் பிரதிபலிப்பதாக அல்லது ஒத்திருப்பதாக இருந்தால் மட்டுமே பதிப்புக்கு வரும். தள நிர்வாகி விதிக்கும் கட்டுப்பாடுகளோடு கூடிய சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டவை, முழுவதுமோ அல்லது திருத்தப்பட்டோ பதிக்கப்படும். ஆனால், வலைப்பூக்களில் எவரும் தமது கருத்துகளை அப்படியே பதிக்க முடியும் என்னும் சுதந்திரம் இருபுறமும் கூரான கத்திக்கு ஒப்பானது என்பது எனது அனுபவக் கருத்து. எதிர்க் கருத்துகளை எழுதும்போதும் முடிந்தவரை அடுத்தவர் கருத்துச் சுதந்திரத்தை மதித்தே எழுதி வருகிறேன்.

பொதுவான விவாதங்களில் எனது மாறுபட்ட கருத்தைச் சொல்லும்போது நன்கு அனுபவமுள்ள பதிவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளேன். குறிப்பாக, பாலியல் கல்வி, பொங்கல் பண்டிகை, சவ அடக்கம் பற்றிய பதிவுகளில் இவற்றைக் காணலாம்.

இஸ்லாத்தைப் பற்றிய ஆக்கங்கள் பெரும்பாலும் வானத்துக்கு மேலே அல்லது பூமிக்கு கீழே நடப்பவற்றைப் பற்றியே இருக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து விலகி, இஸ்லாம் என்பது சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் வாழ்க்கை நெறி என்பதை உணர்த்தும் முகமாகவே பெரும்பாலும் எழுதி இருப்பதாக நம்புகிறேன்.

தமிழ்மணம் நடத்திர வாரப் பதிவுகளில் முழுக்க முழுக்க இஸ்லாம் பற்றி எழுதாமல் பொதுவானவற்றை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் எழுதலாம் என்பது எனது திட்டம்.எனது புரிந்து கொள்ளலைத் தர்க்க ரீதியில் தவறென உணர்த்தினால் பரீசிலித்துத் திருத்திக் கொள்ளத் தயங்க மாட்டேன் என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும்.

எனது சுயதேடல்களைப் பெருக்கிக் கொள்ள எழுதியவை அனேகரின் மனதைக் கவர்ந்திருப்பதை பின்னூட்டங்கள், தனி மடல்கள் மூலம் அறிந்து தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்குவித்த பலருக்கும் நான் உறுதியாக நம்பி இருக்கும் கொள்கைகளுக்கு எதிராக வைக்கப்பட்ட மாற்றுக் கருத்துகளுக்கு விளக

22 comments

  1. உங்கள் நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துகள்.

  2. கோவி.கண்ணன்

    நட்சத்திர வாழ்த்துக்கள் !

    //”நல்லடியார் புராணம் (அறிமுகம்)”//

    நல்லடியார்,

    உங்கள் எழுத்துக்களை மறக்க முடியுமா ? அதுவும் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய அந்த புகழ்பெற்ற எதிர்வினை தொடரில் உங்கள் கருத்தும் எழுத்தும் அட்டகாசம்.

    அதன் பிறகு அள்ளித்தெளிப்பவர்கள் ஓரளவு அடங்கித்தான் போனார்கள்.
    :)

  3. அட்றா சக்கை

    நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவிற்கு வருகை தந்தால் நீங்கள் நட்சத்திரமாகி இருக்கிறீர்கள்!

    வாழ்த்துக்கள்!!

  4. அபு முஜாஹித்

    வருக வருக தங்களின் வரவு நல் வரவாகட்டும்! தமிழ் வலைப்பூக்களுக்கு நான் புதிய வாசகன். ஆரம்பத்தில் வலைப்பதிவுகளில் இடம் பெற்றிருந்த இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளையும் வரலாற்றுத் திரிபுகளையும் குரோத மனப்பான்மையுடன் எழுதப்பட்ட விமரிசனங்களையும் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு பதில் கொடுப்பாரில்லையா என்று ஏங்கிய காலை தங்களையும் தங்களைப் போன்ற நல்லடியார்கள் சிலரின் பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. ஆரம்பம் முதல் சமீபத்திய பதிவுகள் வரை அனைத்தையும் படித்தேன். மனம் நிம்மதி அடைந்தேன். ஒரு வலையுலக போரையே நடத்தி இருக்கும் உங்களை போன்றவர்களின் ஈடு இணையற்ற முயற்சிகளுக்கு வல்ல இறைவன் மகத்தான கூலி தர மனமுருகி பிரார்த்திக்கிறேன். உங்கள் நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

  5. பிறைநதிபுரத்தான்

    வாழ்த்துக்கள் நல்லடியார்!
    உங்களின் விறுவிறு-சுறுசுறு-துறுதுறு-ப்பான கருத்துக்களை படிக்க ஆவலாக உள்ளேன்!

  6. சேதுக்கரசி

    நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

  7. நல்லடியார்

    பாபு,

    நட்சத்திரப் பதிவில் முதல்வராக வந்து வாழ்த்தியதற்கு நன்றி!

  8. நல்லடியார்

    //உங்கள் எழுத்துக்களை மறக்க முடியுமா ? அதுவும் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய அந்த புகழ்பெற்ற எதிர்வினை தொடரில் உங்கள் கருத்தும் எழுத்தும் அட்டகாசம்.அதன் பிறகு அள்ளித்தெளிப்பவர்கள் ஓரளவு அடங்கித்தான் போனார்கள்.//

    அவதூறுகளை அள்ளித் தெளித்தவர்கள் ‘போலி’களாக வந்து கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் ஆறுதல் பதிவு எழுதத் தூண்டியக் கோவியார், தமிழோவிய எதிர்வினைத் தொடரையும் வாசித்திருக்கிறார் என்று அறியும் போது உண்மையிலேயே ஆறுதலாக இருக்கிறது.

    வாழ்த்துக்கும் கருதுக்கும் நன்றி கோவி.கண்ணன்.

  9. நல்லடியார்

    //நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவிற்கு வருகை தந்தால் நீங்கள் நட்சத்திரமாகி இருக்கிறீர்கள்!//

    அட்றா சக்கைண்டானாம்!

  10. நல்லடியார்

    கருத்துக்கும் துஆவுக்கும் நன்றி அபூ முஜாஹித்.

    உங்களைப் போன்றே நானும் வாசகனாக மட்டும் இருந்த காலங்களில் இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளையும் வரலாற்றுத் திரிபுகளையும் குரோத மனப்பான்மையுடன் எழுதப்பட்ட விமரிசனங்களையும் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    அநியாயம் நடந்தால் கரங்களால் தடுங்கள் அல்லது நாவினால் தடுங்கள் எதுவும் முடியாத பட்சத்தில் மனதினால் வெறுத்து அவ்விடத்தை விட்டு ஒதுங்கி விடுவது ஈமானில் கடைநிலை. நான் என்னால் முடிந்தவரை கரங்களால் எழுதி தடுக்க முயற்சிக்கிறேன். அவ்வளதுதான்.

  11. நல்லடியார்

    //உங்களின் விறுவிறு-சுறுசுறு-துறுதுறு-ப்பான கருத்துக்களை படிக்க ஆவலாக உள்ளேன்!//

    பிறைநதிப்புரத்தான்,

    உண்மையைச் சொல்வதென்றால் உங்களின் திண்ணை எதிர்வினைகளுக்கு நான் ரசிகன்.

    அப்புறம்,’பிறைநதி’ எந்தப் பகுதியில் பாய்கிறது என்று நானும் கூகில் எர்த் உதவியுடன் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    (‘பிறைநதி’ ரகசியத்தை விரும்பினால் nalladiyar அட் gmail.com க்கு மடலிடுங்கள்:-)

  12. நல்லடியார்

    //நட்சத்திர வார வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கு நன்றி சேதுக்கரசி!

    (உங்கள் கணவர் பெயர் சேதுவா?)

    :-)

  13. அப்துல் குத்தூஸ்

    தமிழ்மணத்தில் நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள் நல்லடியாரே.

  14. நண்பன்

    நல்லடியார் – மிக்க மகிழ்ச்சி.

    நல்ல படைப்புகளாகத் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்,

    அன்புடன்

    நண்பன்

  15. cheena (சீனா)

    வணக்கம் – நல்லடியாருக்கு நட்சத்திர வாழ்த்துகள். ஒரு வார காலம் நல்ல பதிவுகளைப் பதிந்து மக்களுக்குத் தொண்டாற்ற நல் வாழ்த்துகள்.

    //அநியாயம் நடந்தால் கரங்களால் தடுங்கள் அல்லது நாவினால் தடுங்கள் எதுவும் முடியாத பட்சத்தில் மனதினால் வெறுத்து அவ்விடத்தை விட்டு ஒதுங்கி விடுவது நல்லது. //

    இசுலாமிய வேதமான குரானில் உள்ளது என நினைக்கிறேன். எனக்குப் பிடித்த வரிகள்.

  16. இறை நேசன்

    வாழ்த்துக்கள் சகோதரரே.

    பிணம் தின்னி மோடி ஹிந்துத்துவா அடையாளமாக மீண்டும் வெளிப்பட்டிருக்கும் தருணத்தில் உங்களின் நட்சத்திர வாரம் மிகுந்த எதிர்பார்ப்பைத் தருகிறது.

    அன்புடன்
    இறை நேசன்

  17. அழகப்பன்

    அன்பின் நல்லடியார்,

    வாழ்த்துக்கள். தமிழ்மணம் மற்றும் வலைப்பூக்களின் அறிமுகம் உங்கள் வலைப்பூ குறித்து அறிந்த பிறகே எனக்கு வாய்த்தது என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

  18. வாழ்த்துகள் சகோதரர் நல்லடியார். அவதூறான சில பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களுக்கு தாங்கள் சொல்லும் பதில்கள் மிக மென்மையாகவும், தனிமனித தாக்குதல்கள் இன்றி மற்றவரை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் சொல்வது மிகவும் அருமை. தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    சகோதரன்
    அபூசிதாரா

  19. நல்லடியார்

    //தமிழ்மணத்தில் நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள் நல்லடியாரே.//

    நன்றி அப்துல் குத்தூஸ்.

    (என்னவாயிற்று நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கமே காணோம்? சுவனப்பிரியன் பதிவுகளையும் காண முடியவில்லை!)

  20. நல்லடியார்

    //பிணம் தின்னி மோடி //

    இறைநேசன்,

    பிணந்தின்னி, நரமாமிச உண்ணி,மரண வியாபாரி – என்றெல்லாம் சொன்னாலும் மக்களுக்கு உறைக்கவில்லையே!

    குஜராத் வரலாற்றுப் பாடங்களில் ஹிட்லருக்கே நல்லபெயர் இருக்கும் போது, மோடிக்கும் நிச்சயம் நல்ல இடம் கிடைக்கும்.

    வாழ்க தேர்தல் கமிஷன்! வளார்க அதன் வெத்ட்வேட்டு கண்டனங்கள்!

  21. நல்லடியார்

    அபூசிதாரா,

    உங்களைப் போன்றவர்களின் வாழ்த்தும் உற்சாகமும்தான் மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன.

    //தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

    துஆவுக்கு நன்றி சகோதரரே!

  22. சேதுக்கரசி

    //(உங்கள் கணவர் பெயர் சேதுவா?)//

    உட்காந்து யோசிப்பீங்களோ? :-)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *