அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல்
இந்தப்பிரிகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் தவறாகப்புரிந்தோ, அல்லது வியாக்கியானம் செய்தோ, அல்லது தமது வழிகேட்டுக்கு ஏதுவாக அவற்றை வளைத்துக் கூறியோ வழிகெட்ட தோற்றம் பெற்றிருக்கின்றன. இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கோட்பாட்டை தகர்க்கக் கூடியதாக இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேற்றக் கூடியதாக கொள்ளப்படும்.
மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்ற பொய்யன் “ஒரு நபி, உறுதி வரும் வரை வணங்கினால் போதும்” எனக் கூறி இஸ்லாமிய சட்டங்களை பாழடித்தல், அல்லாஹ் எங்கும் உள்ளான், எல்லாமாக உள்ளான், அனைத்தும் அவனே, அவன் சுத்த சூனியம், அல்குர்ஆனில் குறைவு இருக்கின்றது, அது அவனது யதார்த்தபூர்வமான பேச்சல்ல, அவன் மனிதன் போன்றவன் போன்ற சித்தாந்தங்களைக் குறிப்பிட முடியும்.
அவர்களின் பொருட்களில் இருந்து ஸதகாவை (ஸகாத்தை) எடுப்பீராக! அது அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தும். இன்னும் அவர்களுக்காக ‘ஸலவாத்’ பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு அமைதியாகும். அல்லாஹ் நன்கு செவியேற்பவன். யாவற்றையும் அறிந்தவன். (அத்தவ்பா. வச: 103) என்ற வசனத்தில் இடம் பெறும் வசனத்தில் நபியின் பிரார்த்தனைதான் அமைதியைக் கொண்டுவரும். அதனால் அவர்கள் மரணித்த பின் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. என்ற ஒரு தலைப்பட்சமான முடிவிற்கு ஸகாத் கொடுக்க மறுத்தமை,
ஈஸாவே நிச்சயமாக நான் உன்னைக் கைப்பற்றி, உன்னை என்னளவில் உயர்த்திக் கொள்வேன், நிராகரித்தோரை விட்டும் உன்னை தூய்மைப்படுத்தி, மறுமை நாளில் உன்னைப் பின்பற்றியோரை நிராகரித்தோரைவிட உயர்வாக்குவேன். (3: 55) என்ற வசனத்தில் இடம் பெறும் ‘ தவப்பா’ என்ற மரணிக்கச் செய்தல் என்ற பொருள் பொருத்தமற்றதாக இருந்தும் மரணிக்கச் செய்வேன். எனப் பொருள் கொடுப்பதுடன் தமது கூற்றுக்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை முன்வைத்தல்.
‘எனது இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் எனக் கூறிட நீ எனக்கு எனது கட்டளையிட்டதையே நான் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். என்னைக் கைப்பற்றிய போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய். நீ யாவற்றையும் பார்ப்பவன். (அல்மாயிதா. வச:117) என்ற வசனத்தில் மூஸா நபி உலகுக்கு மீண்டு வந்து உயிர்வாழ்ந்த பின் மரணிப்பதை எடுத்துக் கூறும் வசனத்தை ஈஸா நபி ‘மரணித்து விட்டார்கள்’ எனப்பிரச்சாரம் செய்தல். போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.