இஸ்லாத்தில் மெஞ்ஞானமா?
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமு தாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனை வருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள். அவர்களது வழிமுறையினை நாம் ‘சுன்னா’ என்று அழைக்கின்றோம். நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள்..
‘மக்களே நான் உங்களைத் தெட்டத் தெளிவானதொரு பாதையிலே விட்டுச் செல்கின்றேன் அதன் இருள் சூழ்ந்த இரவு ப்பகுதி கூட பட்டப்பகலைப் போல் பிரகாசமிக்கதாய் விளங் குமளவுக்கு அவ்வழி மிகத் தெளிவான வழியாகும். தன்னைத் தானே அழிவின் பக்கம் போட்டுக் கொள்ளும் துரதிஷ; டமிக்கவனைத் தவிர வேறு எவரும் இவ்வழியை விட்டும் தடம் புரண்டு செல்ல மாட்டார்கள் ‘ ( இப்னு மாஜா 43 )
மேலும் கூறியுள்ளார்கள், “நான் உங்கள் மத்தியில் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் பலமாகப் பற்றிப் பிடித்திரும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறிவிட மாட்டீர்கள், அவைதான் ஒன்று அல்குர்ஆன் அடுத்தது எனது குடும்பத்தினரின் வழிமுறையாகும்’ என்றார்கள். ( முஸ்லிம் 2137 )
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள். பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள். பின்பு இதோ இருக்கும் நேர்கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழிமுறையாகும். அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும், எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும். நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான். ( அல் அன்ஆம் 153 )
எனவே மேற்படி நபிமொழிகளிலிருந்து நபியவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழியிலேயே நடக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருப்பதுடன் அதைப் புறக்கணித்து வேறு வழியில் நடக்க முற்படும் போது நிச்சயமாக அது வழிகேட்டின் பக்கமே இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்திருப்பதை அறிய முடிகின்றது.