நேற்றைய பதிவு, இது காணவில்லை என்பதால் மீண்டும்…
2005 மார்ச் மாதம் இறுதியில் எடுக்க வேண்டிய விடுமுறையை, 2005 ஜனவரி 16ந் தேதியில் பெற்றுக் கொண்டு ஜனவரி 17ந் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினேன்.
குடி புகலை முடித்து, பின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினேன். மாலை 5 மணிக்கு திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் இருக்கையை பதிவு செய்து கொண்டேன்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று வரும் எண்ணமும் இருந்தது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தை விசாரித்து தெரிந்து கொண்டு, எந்த நேரத்தில் காணமுடியும் என்பதில் காலை பத்து மணிக்குப் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் என்ற தகவலின்படி காலை பத்தரை மணிக்கு காயிதே மில்லத் கலைக் கல்லூரி சென்ற போது கல்லூரி விளாகத்தின் இரும்புக் கதவின் வாசலில் இருந்த சீருடையாளரில் ஒருவர் ”பகல் 2 மணிக்கு மேல்தான் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் இப்போது உள்ளே வர அனுமதி இல்லை” என்றார்.
நான் திரும்பிச் சென்று பகல் 2 மணிக்கு மீண்டும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி விளாகத்தில் நுழைந்தேன். மக்கள் கூட்டம் நுழைவுச் சீட்டுக்காகக் கத்திருந்த வரிசையோடு நானும் சேர்ந்து கொண்டேன்.
நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்லும் வழியில், புத்தகக் கடைகளின் பெயர்கள் – எண்களுடன் குறிப்பிட்ட முகவரி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தேவையான கடையைத் தேடி அலையும் சிரமத்தை, அந்தத் துண்டு பிரசுரம் முற்றாக நீக்கி விடுவது மட்டுமல்லாமல் நாம் தேடிவந்த புத்தகக் கடையையும் ”இதோ இங்கிருக்கிறது” என்று பளிச்சென்று அடையாளம் காட்டித் தருகிறது.
கிழக்கு பதிப்பகம் புத்தகக் கடையில் ”இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்” மற்றும் ”டாலர் தேசம்” ஆகிய இரு புத்தகங்களும் வாங்கினேன்.
ஸாஜிதா புக் சென்டர் புத்தக் கடையில் திருக்குர்ஆன் விரிவுரையான தோற்றுவாய், பசுமாடு ஆகிய இரு அத்தியாயம் மட்டும் முதல் பாகமாக தமிழாக்கம் செய்து வெளிவந்துள்ள ” தஃப்ஸீர் இப்னு கஸீர்” வாங்கினேன்.
IFT நிறுவனத்தின் புத்தகக் கடையில் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் முதலிரண்டு பாகங்களும் வாங்கினேன்.
புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகக் கடைகள் இருந்தும் அவற்றைப் பார்க்க நேரமின்மையால் மாலை 5 மணிக்கு பதிவு செய்தப் பேருந்து பயணத்தை கவனத்தில் கொண்டு விரைவாக வெளியேற வேண்டியிருந்தது.
It is a dare devil effort to to do this kind of work now a days.
Any how for the issues related to books is ineterestin, apart from which ever the subject.
http://www.poiyummeiyum.blogspot.com