Featured Posts

[தொடர் 12] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleகப்று வணங்கிகள் பற்றிய முன்னறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரணத்தின் பின்னர் தோன்றவிருக்கும் வழிகெட்ட பிரிவுகள் பற்றியும், குழப்பங்கள் பற்றியும் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். அந்தப்பிரிவில் ஹவாரிஜ்கள் எனப்படும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோர் பற்றித் தெளிவாகவும், ஏனைய பிரிவுகளும் சூசகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் வெறுத்ததைச் செய்து கொண்டு, இமாம்களின் தீர்ப்புக்களையும் புறந்தள்ளிவிட்டு, தான் தோன்றித்தனமாக மார்க்கத்தில் கப்று வணக்கத்தை உருவாக்கி, அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்து மதிப்பிடும் சுன்னத் ஜமாஅத் பெயர் தாங்கிகள் இந்தப்பிரிவில் உட்படுத்தப்பட வேண்டியவர்களே.

ஹுதைபா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நரக அழைப்பாளர்கள் பற்றிய நீண்ட ஹதீஸில் …

فَقُلْتُ هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا قَالَ نَعَمْ قَوْمٌ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا

அல்லாஹ்வின் தூதரே! இந்த நன்மைக்குப்பின் தீமை ஏற்படுமா எனக் கேட்டேன்? ஆம். நரகத்தின் வாயிலில் நின்று கொண்டு அழைக்கும் அழைப்பாளர்கள். அவர்களுக்கு யார் பதில் தருகின்றானோ அவனை அவர்கள் அதில் (நரகில்) தூக்கிப் போட்டுவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப்பற்றி எமக்கு வர்ணியுங்கள் எனக் கேட்டேன். ஆம். அவர்கள் நமது இனத்திலுள்ள ஒரு கூட்டம்தான். நமது மொழியே பேசுவார்கள், எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும், குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘கிழக்கை நோக்கி சைகை செய்ததை ஈராக்கையும், அதைச்சூழவுள்ள பிரதேசத்தையுமே தெளிபடுத்துவதாக புகாரியின் விளக்கவுரை நூற்களான பத்ஹுல்பாரி, ஷரஹுல்பத்தால் ஆகிய நூற்களில் முறையே இமாம்களான இப்னுஹஜர் அல்அஸ்கலானி, இமாம் இப்னு பத்தால் ஆகியோர் தமது விரிவுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜமல், சிப்பீன் போர், ஹவாரிஜ்களின் தோற்றம், இப்பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளது. அங்குதான் ஜஹ்மிய்யாக்கள், கத்ரிய்யாக்கள், ஜப்ரியாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவுகளும் தோற்றம் பெற்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஷீஆக்கள், இந்த சமுதாயத்தில் இஸ்லாம் என்ற பெயரால் கப்று வணக்கக் குப்ரை முதல் முதலில் அரங்கேற்றியவர்கள் என்பதை கப்று வணங்கிகள் அறிந்திருப்பார்களோ, என்னவோ தெரியவில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

One comment

  1. http://www.radicalmiddleway.co.uk/videos.php?id=1&art=8
    மரியாதை குரிய தாயீ அவர்கலே…..
    1 )நிட்சயமஆக “கபுறு வணக்கம் ஷிற்குதான்”
    விபரம் தெரியாமல் யாரயும் குத்த வாளியாக பார்க்க வேண்டாம்
    தரீக என்றால் அரபு மொழியால் பாதை அதாவது வழி முறை .
    2) அப்துல் காதர் ஜீலானி ரஹ்ம்ஹுல்ல .இவ்ர ஹன்பலி மதுஹபுடைய ஷேய்க்
    3)அல்ஜெபிரி என்பது இவெர்கல் மக்காவை சேர்ண்டவர்கள் .ஈராக் நாட்டை சாண்டவர் அல்ல சவுதிஅரேபியாவில் ஜெட்டாவில் அதிகமனவெர்கள் அல்ஜிப்ரி
    குடும்பத்திநர இருகுறரகள் அத்தோடு (எமன்) நாட்டிலும் இவர்கள் இருக்கிறார்கள்

    சியாரம் அதாவது கபுறுகலை தரிஷிகும் சுன்னத் ஆன முறையை சொல்லிக்
    கொடுங்கள் திரிந்திக் கொள்வார்கள்
    நிச்சயமாய் கபுருவன்க்கம் ஷிர்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *