மக்காவிலிருந்து “குதை வாகன நிறுத்துமிடம்” வழியாக செல்லும்போது அல்-நூர் மருத்துவமனை முடிவில் வலது பக்கம் திரும்பினால் “அல் ஹதா” போகும் வழி வரும். இவ்வழியே செல்லும்போது தோராயமாக 40 அல்லது 45 கி.மீ தூரத்தில் தாயிஃப் செக் போஸ்ட் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் நிரம்புமிடத்திலிருந்து 500 மீட்டர் தள்ளி “டெலிஃபெரிக்” செல்லும் வழி என அரபி மொழியில் வலது புறத்தில் வழிகாட்டி பலகை இருக்கும்.
அவ்வழியே சற்று தாழ்வாக இருக்கும் பாதையில் சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பயணச் சீட்டு வாங்க வேண்டும்.
கேபில் காரில் செல்ல பயணச் சீட்டு விலை விபரம் (செப்டம்பர் 2009):
தற்போது பெரியவர்களுக்கு சவுதி ரியால் 60-ம், சிறியவர்களுக்கு சவுதி ரியால் 30-ம் பயணச் சீட்டு விலையாகும். ஒரு கேபினை (Cabin) முழுமையாக எடுத்துக்கொண்டால் சுமார் 8 பெரியவர்கள் உட்காரலாம். இதன் விலை சவுதி ரியால் 300. கேபில் கார் ஸ்டேஷன் தாயிஃப் மலையின் தொடக்கத்திலும், தாயிஃப் மலை ஏறி முடிந்தவுடன் உள்ள இடத்திலும் அமைந்துள்ளது. மேற்கூறப்பட்ட விலை Return (full round trip) க்கு உரியதாகும். Oneway trip-க்கு இதில் பாதி விலை மட்டும். Return-ல் ஏறியவர்கள், மலை மீது உள்ள ஸ்டேஷனில் இறங்கி உட்கார்ந்துவிட்டு வரலாம்.
பயணச் சீட்டு வாங்கிய பிறகு, அங்கு உள்ள ஸ்டேஷன் வாகனத்தில் நம்மை அழைத்துக் கொண்டு சுமார் 1 கீ.மீ தூரத்தில் உள்ள கேபில் கார் ஏறும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கு கேபில் கார் தவிர குழந்தைகள் விளையாடும் இடம், மலைமீது செல்லும் தானியங்கி கார், பல வகை தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன.
தாயிஃபிற்கு மலை வழியே செல்லும் “அல் ஹதா” மலைப்பாதை செப்பனிப்பட்டு மீண்டும் திறந்து சுமார் இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. கேபில் கார் இருந்துக்கொண்டு வாகன வழியையும், பயணி்த்துக் கொண்டிருக்கும் வாகன வரிசைகளையும் பார்ப்பது அழகாக இருக்கிறது. உயரமான மலைகளில் நிறுத்தப்பட்ட தூண்களில் கட்டப்பட்ட உலோக கயிற்றில் பயணம் செய்வது இனிமை, கேபில் கார் அத்தூண்களின் வழியாக செல்லும்போது கொடுக்கும் சிறு அதிர்வுகள், பயத்தை கொடுத்தாலும் கூட.
கோடை காலமாக இருந்தாலும்கூட, மாலையில் மலைமீதிருக்கும் தாயிஃப் கேபில் கார் ஸ்டேஷனில் குளுகுளு காற்று வீசியது.
Very nice to see it, if publish more detail about Tayeb cable car system will be help us
Hi!
good picture

சுப்ஹானல்லாஹ்.
جزاك الله خيرا
for your detail explanation
سبحان الله العظيم هذا من صنعة الله في الدنيا , فكروا يا إخوان كيف تكون الجنة . اللهم أدخلنا في الفردوس الأعلى, آمين .