Featured Posts

அல்-ஜுபைல் மாநாகரில் நடந்த பெருநாள் – ஈதுல் பிஃத்ர் தொழுகை (20-09-2009)

Eidul Fitr at Jubailஎல்லாம் வல்ல அல்லாஹ்-வின் திருப்பெயரால்…

வழக்கம்போல் இந்த வருடமும் நோன்பு பெருநாள் தொழுகையை திடலில் நடத்திட அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து இருந்தது. தமிழ் பேசும் சகோதரர்களிடம் செய்தியை சென்றடைவதற்காக கையடக்க நோட்டீஸ், சிறிய நோட்டீஸ், பெரிய வால் போஸ்டர்கள் என பலவகையான நோட்டீஸ்களை அழைப்பு பணியின் உதவியாளர்கள் தமிழ் பிரிவு குழுமம் ஏற்பாடு செய்ததோடு மட்டுமின்றி மாநகரின் முக்கிய பள்ளிவாசல்களில் அதனை ஒட்டவும் செய்தது. மேலும் நகரின் முக்கிய வீதிகளில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு மக்களின் கவனத்திற்க்கு பெருநாள் தொழுகை நடைபெறும் திடல் பற்றிய செய்தியை மக்களிடம் சேர்த்தது அழைப்புபணி உதவியாளர்கள் என்றால் மிகையாது.

சவூதி அரேபியாவில் பெருநாள் தினம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் அன்றிரவே தொழுகை நடைபெறும் திடலை தயார் செய்வதற்காக அழைப்பு பணி உதவியாளகள் அல்-ஜுபைல் போர்ட் கேம்பில் முகாமிட்டு அயராதுழைத்து மக்கள் தொழுவதற்கான அனைத்து வசதிகளையும் தயார் செய்தனர். அவர்களுடன் கல்ப் கம்பேனி நிறுவன ஊழியர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.

இதற்கான தரை விரிப்புக்கள் (பிளாஸ்ட்டிக் பாய்கள்) மற்றும் பெண்கள் தொழுமிடங்களுக்கு செல்லும் வழி, தொழுகை நடத்துவதற்கான மிஹ்ராப் ஆகியவற்றிற்கு தேவையான ஸ்கேப் போல்டிங் மற்றும் மறைவுகள் போன்றவற்றை Star of Kingdom Service (SKS)-யின் Project Manager சகோ. ஸர்புத்தீன் பாய் அவர்கள் தனி மேற்பார்வையில் SKS நிறுவன ஊழியர்களை கொண்டு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதைப் போல் திடலை சுத்தம் செய்து, தேவையான நிறுவன ஊழியர்களையும் ஏற்பாடு செய்து தந்தது மட்டுமின்றி தொழுகை முடிந்த பிறகு தேனீர் மற்றும் இனிப்பு வகைகளை வழங்கியது Gulf Company.

இவ்விரு நிறுவனங்களும் பல வருடங்களாக அழைப்புபணிக்கு (குறிப்பாக தமிழ் பிரிவிற்கு) மிக அருமையான சேவைகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயிரக்கான மக்கள் குறிப்பாக தமிழ்பேசும் அன்புசகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். பெருநாள் குத்பா பேருரையை மதீனா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டியிருக்கும் இலங்கை பரஹதெனியவை சார்ந்த மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் ஸலபி அவர்கள் வழங்கினார்.

அவர் தனது உரையில், ரமழானில் எப்படிபட்ட பயிற்சியை எடுத்தோமோ அதை ரமழானுக்கு பிறகும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதேபோல் இன்றுடன் நம் மனதில் அடுத்த முஸ்லிம் சகோதரர்களைப்பற்றி குரோதங்கள் விரோதங்கள் இருப்பின் அதனை முற்றிலுமாக களைந்த புதிய சமூகம் படைக்கவேண்டும் என மிக ஆணித்தரமாக குர்ஆன் ஸுன்னா ஒளியில் உணர்த்தினார். (இதன் தாக்கமாக பேரூரை முடிந்த பிறகு சில இயக்க சகோதரர்கள் சிலர் மீது கொண்டிருந்த விரோதங்களுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு உரையின் தாக்கமாகவே இதனை செய்வதாகவும் கூறியதை கண்டு கண்கலங்கி நின்றனர்) மக்கள் தாய் நாட்டில் பெருநாளை கொண்டாடியது போன்ற உணர்வில் கலைந்து சென்றனர்.

எல்லா புகழும் அல்லாஹ்-விற்கே!

6 comments

  1. Assalamu Alikum….

    I appreciate your excellent arrangement for Eid Fitr Prayer in Jubail Port Camp. It seems that we had more crowd than the last year. It is better to plan extra space for both men and women for coming Eid Adha Prayer.

    Another highlight I really enjoyed is the Bayan which asked all people to UNIT together. This is in need of hour. I do expect the same from all the Bayans in the future.

    Best regards,

    Zainudeen

  2. walikum salaam bro zainudeen jazakallahu hiran for your regards pls dua for all of us

  3. i see your eid prayer photos

  4. Asalamu alikume !

    Eid Mubarak to all.

    I miss this year Eid Prayer at Jubail Port Masjid. And it is very happy to see our brothers celebrating the EID.
    With allah’s grace i too enjoyed with my family in India.
    Insha allah i hope to participate in this year Eid Adha prayer.

    Best Wishes!!!!!!!!

  5. Assalamu alaikum..

    dear riskan moulavi and admin.

    I have heard about eid prayer program. It will be really appreciate if u upload the video of that program.

    jazakallah..

  6. தங்களது இணையதளத்தில் ‘அல்-ஜூபைல்’ ஈத் பெருநாள் தொழுகை சம்பந்தமான செய்திக்கட்டுரை கண்டேன் மகிழ்ச்சி.
    அல்-ஜூபைலில் இந்த ஈத் பெருநாள் தொழுகை கடந்த 5-6 வருடங்களாக நடைபெற்று வருகிறது, அதற்கு எங்களால் இயன்ற உதவிகளை ‘மறுமையின் கூலியை மட்டும்’ எதிர்பார்த்து செய்து வருகிறோம்.

    நாம் செய்யும் உதவியை விளம்பரப் படுத்துவதன் மூலம் மறுமையின் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன்.
    முஹம்மது (ஸல்) அவர்கள், “வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர்” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி)
    மேற்கண்ட ஹதீஸில் உள்ளது போல் செய்வதுதான் எங்கள் நோக்கம்.

    ஆதலால் இதுபோன்ற கட்டுரைகளில் என் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட என்னுடைய பெயரை பயன்படுத்தி நான் விளம்பரம் விரும்பி என்ற மாயை உருவாக்கியது தவறு. மீண்டும் இது போன்ற குழப்பத்தை தவிர்க்கவும்.

    அல்லாஹ் நம் அனைவரின் நல் அமல்களையும் ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிவானாக!

    K. சர்புதீன்
    அல்-ஜூபைல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *