Featured Posts

அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!

கவிதை
ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவாசியாக!

இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!

தனிமையில்
தலையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!

ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!

குரல்களில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!

கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக்க மட்டுமே முடிந்தது!!

மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் அத்தா என்று!
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!

– யாசர் அராஃபத்

19 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    மனைவி, மக்களை ஊரில் விட்டு விட்டு , அரேபியாவில் காசு சம்பாரிச்சு என்ன செய்யப் போகிறார்கள் என்று தான் தெரிய வில்லை. கடைசியில் கபுருக்குப் போகும்போது ஒரு பைசாக்கூட கூட வராது . இது அவர்கள் தனக்குத்தானே செய்யும் தண்டனை மட்டும் அல்லாமல், தன் மனைவிகளுக்கும் செய்யும் அக்கிரமம். ஊரில் சம்பாரிச்சா , கொஞ்சம் காசு கிடைச்சாலும் அதை வைத்து பர்கத் தேடி, குடும்பத்துடன் வாழ வேண்டும். குடும்பத்தை தன்னோடு வைக்க வசதி இல்லையென்றால், தனியாக விட்டு, அரேபியா செல்வது சரி இல்லை. இது நமது இஸ்லாமிய மார்கத்துக்கு முறனானது. இப்படி நமது ஹலாலான வாழ்க்கையை தனக்கு தானே தவிர்த்துக் கொண்டு , ஹராமை தேடி செல்பவர்கள் இருக்கிறார்கள். கல்யாணம் செய்வது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமை. கல்யாணம் செய்வது ஒருவரின் பார்வையை தாழ்த்த உதவ வேண்டும்.இல்லையென்றால், கல்யாணம் செய்வதின் அர்த்தமே இல்லாமல் போய் விடும்.

  2. nt much good in rhyming bt also some what tried

  3. நட்சியார்கோயில் சுல்தான்

    உங்களது கவிதை கடல்தாண்டி வாழும் உள்ளங்களின் எண்னங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்தது.

  4. அனைத்துமே உண்மைகள் எண்ணங்களை வாா்த்தைகளாக்கியுள்ளீா்

  5. i like thi webpage

  6. Assalamu Alikum (Varah..)

    Insha Allah i will back to my native….Remember me in ur prayers ….

  7. நன்றாக இருந்தது!

  8. It was very nice to read and this what happening everybody whoever work in abroad..
    Appreciated & extremely Good

  9. I Like this poem

  10. very nice

  11. Your Poem is attractive to me.so very well.

  12. Respected sisters in islaam! Assalamu alaikum
    As far as I am concerned most of the brothers worked in the desert only because of you! to improve your lifestyle
    they are worked hard in the desert! so please ask them to comeback! guranteed them to even a ordinary life style is enough for us! Lakh of people came to tamilnadu from rajasthan which is a dry desert! and earn their livelihood in tamilnadu? they sold paani puri,samosa,gulfi ice, tea and what not! Hope on ALLAH ! Are you ready sisters?

  13. Nice one, it is true. So I like this poem

  14. Ulaka penkalin kanneer ivar eluthukkalil varthaikalaka vanthullathu

  15. assalam kavithaiyil thadumaramal sariyana thadam kattiya sahothari abu ahamara avarkalai allah ner valiyil urithi paduthuvanaha

  16. realy nice poem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *