Featured Posts

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.

நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.

ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).

அபூ உமர்

25 comments

  1. இன்ஷா அல்லாஹ் வீடியோ எதிர்பார்த்து.

  2. pls upload the vdo as soon as possible.i,m also his big fan from 2007

  3. Assalamu Alaikum………Brother’s in Islam……….
    Alhamthulilahu…………Allah the Great ……… Masahallah…..
    Inshaallah….We all pray to Allah giveing you Good health and
    Working in Allah Way for Reward in Heare and Heareafter………..
    Wassalam……….

  4. masha Allah………….

  5. barakallah

    really islam is the best

    Rimzan

  6. aslamu Alaikkum
    allah the great, masha allah

    abdul kareem

  7. அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுடைய இம்மை மறுமை வாழ்க்கையினை மேலும் சிறந்ததாக ஆக்கியருள்வானாக

  8. அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுடைய இந்த (உண்மையின் பால் ) வருகை நாத்திகம் பேசிக்கொண்டு நாட்டையும் மகளையும் வழிகெடுத்து .உண்மையின் பக்கம் மக்களை வரவிடாமல் தடுத்துகொண்டிருக்கும் அந்த பொய் பெரியாரிசம் பேசும் பொய்யர்களுக்கு இந்த உண்மையான பெரியார் வாதியின் நெத்தியடி இதற்க்கு அவர்களின் பதில்

  9. ASSALAMU ALAIKUM..

    ELLAPUGALU IRAIVANUKKEY..

    Abdullah bhai itha.. itha.. itha.. than nan unga kita ethir parthen. Life la neenga jaichitinga sir. valthukkal.
    Islam piracharam ungal moolamum thodara ellam valla allah allah arul purivanaga…

    By
    Mohamed Faruq

  10. masha allah, allah is great.

  11. always islam is great thing

  12. Capt.Kader, Jakarta

    it is given me a great pleasure to listen Dr.Priyaar Dasan speech held at Jeddah on 14th March’10. His explanation on various disorders is fantastic. We’ll pray Almighty to introduce more people like him to convey the Islam is the best on the earth. Capt.Kader – Jakarta

  13. samsul_2010@yahoo.com

    assalamu alaikum..

    MASHA ALLAH..

  14. ASSALAMU ALAIKUM..
    Allah is great.

    He wil give opportunities,but we should b able to gain something best out of them for our hereafter with His Helps.

    He is most gracious and most merciful.

    ELLAPUGALU IRAIVANUKKEY..

  15. சொவர்க்கம் கிடைக்க வாழ்த்துக்கள்……….

  16. நிச்சயமாக இது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை!!!!!!!!!! சஹோதரர் அப்துல்லாஹ் அவர்களின் பேச்சை கேட்ட போது என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கின. நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்து சமுதாயத்திற்காக என்ன செய்தேன் என்ன செய்ய போஹிரேன்? என்னை சிந்திக்க வைத்த அல்லாஹ் கே எல்லா புகழும்.

  17. Musilm Region Always Great(Iraivan Oruvanna).i accept

  18. AQSI from SriLanka

    I am from Srilanka

    சுபஹானல்லாஹ் !!! அல்லாஹ் நேர்வழி நடப்பவர்களை கைவிடுவதில்லை

    ஆனால் ஒரு விடயம்

    குர் ஆன் சுன்னா பேசும் இஸ்லாமிய அமைப்புக்கள் இப்போதும் கூட ஒற்றுமையாய் பெரியார்தாசன் அவர்களை வரவேற்றதாக தெரியவில்லை மாறாக‌

    எவரது web இல்
    பெரியார்தாசன் பற்றிய செய்தி இடம் பெரும் என்பதற்கும் போட்டி

    பெரியார்தாசன் அவர்களின் video
    யார் தளத்தில் முதலில் இடம் பெரும் என்பதிலும் போட்டி

    ஒவ்வொரு அமைப்புக்களும் மற்ற அமைப்புக்களை கீறியும் பாம்பையும் போன்றே பார்க்கின்றன !!
    அல்லாஹ்….. எப்போது தான் இது முடிவடையும் ?

    HOLD TO THE ROPE OF ALLAH !!!

  19. assalammu alaikkum

    i am very happy to hear and see that dr. abdullah embrassed

    isalam, may allah gives him a long life to continue his work for

    isalam. sadiq basha from FRANCE -PARIS(kottakuppam orgin)

    ALLAHU AKBAR

  20. Assalamu alaikkum warahmathullahi wabarakathuku,

    நிச்சயமாக இது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை!! சஹோதரர் அப்துல்லாஹ் அவர்களின் பேச்சை கேட்ட போது என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கின. நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்து சமுதாயத்திற்காக என்ன செய்தேன் என்ன செய்ய போஹிரேன்? என்னை சிந்திக்க வைத்த அல்லாஹ் கே எல்லா புகழும்.

  21. MAASAA ALLA ELLAAP PUGALUM ALLAHUKKAY

  22. Dear AQSI,

    Be Positive,

    Don’t worry about the islamic movement in the society.Make a lesson from Br.Periyardasan.

    He dint go for the in detail of Islamic movements all around.
    He choosed Holy quran for his research.

    let quran & sunnah be our way of life.

    m.r.m (sri lanka)

  23. masha allah

  24. whaheedha latheef

    Dear mr Abdullah,
    Assalamu Alikkum Var.,

    நிச்சயமாக இது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை!! சஹோதரர் அப்துல்லாஹ் அவர்களின் பேச்சை கேட்ட போது நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்து சமுதாயத்திற்காக என்ன செய்தேன் என்ன செய்ய போஹிரேன்? என்னை சிந்திக்க வைத்த அல்லாஹ் கே எல்லா புகழும்.

  25. நிச்சயமாக இது அல்லாஹ்வின் அருட்கொடை!
    எல்லா புகழும் இறைவனுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *