Featured Posts

அபூ முஹைக்கு பதிலாம்!?

சாப்பாடு, சாப்பாடு என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

நிறைந்து விடும் என்று நேசமுடன் ஒருவர் சொல்கிறார்!

அபூ முஹைக்கு பதில் என்று தலைப்பு எழுதி விட்டால் அது அபூ முஹைக்கு பதில் சொன்னதாகிவிடுமா?

ஆம்! பதில் சொன்னதாகிவிடும் என்று இவர் நேசமுடன் நம்புகிறார்!

//அபூ முஹைக்கு பதில் – ஏகத்துவம் பற்றி

நபிகள் நாயகம், ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டார் என்று நான் முன்பு எழுதியிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார் அபூ முஹை. நான் சொன்ன அதே விஷயத்தை சற்றே மாறுப்பட்ட விதத்தில் விரிவாக எழுதியுள்ளார் ரசூல், இந்த திண்ணை இதழில்.//

நாம் ஆதாரத்தை கேட்டதாக உளறியிருக்கிறார்!

கேட்டது நாமல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்பு சகோதரர் அப்துல்லாஹ் கேட்ட கேள்வியை, மீண்டும் நினைவுபடுத்தி சகோதரர் இப்னு பஷீர் கேட்டிருந்தார்.

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது
(நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி சில விளக்கங்கள் – நேசகுமார் – திண்ணை 16/12/2004)// –

– இதற்கு ஆதாரங்களை சகோதரர் அப்துல்லாஹ் கேட்டிருந்தார்…

//இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் ”நபிகளாரின் காலத்திலேயெ” என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!//

****************************
மேற்கண்ட அப்துல்லாஹ்வின் கேள்விக்கு நேரடி விடை தெரியாமல், இரண்டு வருடம் கழித்து திண்ணை ரசூல் என்பவரின் துணையை நாடியிருக்கிறார். இதாவது உருப்படியான விளக்கமாக இருக்கிறதா பாருங்கள்…

//” இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கே’யிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.

4. இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராதான விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராம­ய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.

இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும”// –
– http://www.thinnai.com/?module=displaystory&story_id=60704121&format=html

சின்னப் பிள்ளைகளுக்கு நிலாக் கதை சொல்ற மாதிரி இருக்கிறது.

ஹஜ் கிரியைகள் பற்றி குர்ஆன், சுன்னா சொல்லும் வழிமுறைகளில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஹஜ் கிரியைகளுக்கும், சிலை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு இருப்பதாக சொல்ல வருகிறார்? அதை திண்ணை ரசூலின் செய்தியிலிருந்து இந்த மனநோயாளி விளக்கட்டும்!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே காபாவிலிருந்த சிலைகள் நபியின் உத்தரவோடு அப்புறப்படுத்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கு மாற்றமாக…

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது//

…இப்படி உளறியிருப்பது மனநோயின் உச்ச வரம்பு!

கருப்புக் கல் – ஹஜருல் அஸ்வத் – (அஸ்வமேத அல்ல) – பற்றி முஸ்லிம் பதிவர்கள் தேவையான அளவுக்கு விளக்கம் எழுதியிருக்கிறார்கள். இன்னும் கருப்புக் கல்லை சிலை என்பவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

நிற்க வைத்து கும்பிடுவதையும், படுக்கப் போட்டு கும்பிடுவதையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரம் வைக்கட்டுமே பார்க்கலாம்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

5 comments

  1. அட்றா சக்கை

    அபூமுஹை அய்யா,

    நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? தன்னுடைய கூட்டாளி கையும் களவுமாய்ப் பிடிபட்டு அசிங்கப் பட்டு நிற்கிற நேரத்தில் நிதானம் தவறி மனநோய் முற்றிப் போய் உளறிக் கொண்டிருக்கிறார்.

    அதோடு மோடித்தனமான மிரட்டல்களையும் வைக்கிறார்.

    அந்த லூசுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரவிரயம் வேண்டாம். (லூசு= மனநோயாளி)

    நன்றி!

  2. அபூ முஹை

    அட்றா சக்கை ஐயா!

    வேறு கிரகத்திலிருந்து புதிதாக நீங்கள் பூமிக்கு வந்திருப்பபது போல் தெரிகிறது.

    //*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//

    சம்பந்தப்பட்டவர், ரொம்ப நாட்களுக்கு முன்பே பிறரைப் பிராண்டத் தொடங்கி விட்டார்.

  3. சுல்தான்

    அந்த பதிவை நானும் படித்தேன். ஏகத்துவம் என்று அடித்து கூகிளில் பார்த்தால் நேசகுமார் என்ற பெயரில் சில உளறல்கள் வர வேண்டும். அதற்காக மனநோய் பீடித்தவன் போல் சம்பந்த மில்லாமல் உளறி வைத்திருக்கிறார்.

    நாம் நல்ல படியாகவே யோசிப்போம். முஸ்லீம்களில் நிறைய பேர் இன்னும் பதிவுலகத்துக்கு வந்து இஸ்லாத்தைப் பற்றி நிறைய நல்ல கருத்துக்களை பதிய வேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய உண்மையான கருத்துக்கள் மக்கள் மத்தியிலே பரவவேண்டும் என வற்புறுத்துகிறார். கூகிளில் தட்டினால் அவர் உளறல்களுடன் உண்மையும் வரவேண்டும் என விரும்புகிறார். நன்மையான காரியம்தானே.

  4. வேனாம்… வலிக்குது… அழுதுடுவேன்… (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

    ஆளாளுக்கு அவரைப் பிராண்டியதால் இப்படித்தான் அவர் தற்போது கூறிக் கொண்டுள்ளார்.

  5. அபூ முஹை

    சுல்தான், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    அபூ, உங்கள் வருகைக்கு நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *