-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட் டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்ட ளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்) எனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்தி லும் (மையவாடியிலும்) கப்ரு கட்டக் கூடாது.
மரணித்துப் போன ஒரு மனிதனின் பெயரால் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கப்று கட்டுதல் நாளடைவில் அதனையே வணங்கக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் கேட்டு பிரார்த்திக்கக் கூடிய நிலை வந்துவிடும். அல்லாஹ்வை மறந்துவிட்டு கபுரடியில் மண்டியிடக் கூடிய நிலை உரு வாகிவிடும். இந்த நிலை நூஹ் நபியுடைய சமுதாயத்திற்கு ஏற்பட்டபோதுதான் அல்லாஹ் அதனை கண்டித்து பிரசாரம் செய்வதற்கு நூஹ் நபியை அனுப்பி வைத்தான்.
வத் சுவா யஊஸ் யஹூக் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நிiவு சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் கப்ரிலுள்ளவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி)
யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத் தில் மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக் களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.
நபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீதுபோடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி
அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல்: முஸ்லிம்
இன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளி வாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பண்ணீர் தெளித்து ஊது பத்தி பற்றவைத்து சாம்பரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடாத்துகிறார்கள். அல்லாஹ்வின்தூதரின் எச்சரிக்கையையும் பொறுப்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.
எனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களில் இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படியாயின் நபி (ஸல்) அவர்களின் கப்று மட்டும் மஸ்ஜிதுந் நபவியில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன சிலர் கேட்டு பள்ளியில் கப்று கட்டவதை நியாயப்படுத்துகிறாரக்கள். இதற்கான பதிலை எமது மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா? என்ற கட்டுறையை பார்வையிடவும்.