Featured Posts

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.

இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து மாதிரியான அமைப்பில் துஆக்களை உருவாக்கிக் கொண்டு ஓதிவருகிறார்கள். தொழுகை நடாத்தக் கூடிய இமாம் அந்த துஆக்களை ஓத மற்றவர்கள் கிளிப் பிள்ளைபோல் “ஆமீன்” சொல்லி விட்டு போகிறார்கள். அது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஐந்து மாதிரி -இந்த பள்ளி இமாம் ஓதுகிறமாதிரி- துஆ ஓத சஹாபாக்கள் ஆமீன் சொன்னாரகளா? ஏன்பதை கூட விளங்குவதில்லை.

இமாம் என்ன துஆ ஓதுகிறார். எதைப் பற்றி அவர் துஆ கேட்கிறார். அதன் பொருள் என்ன? யாருடைய நிலையை அறிந்து யாருக்காக துஆ கேட்கிறார். அவருடைய கஷ்டத்தை மனதில் வைத்து துஆ கேட்கிறாரா? பள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொருவருடைய மனநிலையை அறிந்து புரிந்து துஆ கேட்கிறாரா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் மக்களும் “ஆமீன்! ஆமீன்!” என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.

தொழுகை முடிந்தபின் இமாம், சுப்ஹா னல்லாஹ்(33), அல்ஹம்துலில்லாஹ்(33) அல்லாஹு அக்பர்(34) என்ற எண்ணிக் கையில் திக்ருகளை மாத்திரம் சொல்லுவார். மக்களும் அதனை சொல்லிக் கொண்டிருப்பர். இமாம் திக்ருகள் சொல்லி முடிந்ததும் சப்தமிட்டு துஆ ஓத ஆரம்பித்து விடுவார். உடனே மக்களும் செய்கின்ற திக்ருகளை இடைநடுவில் நிறுத்திவிட்டு இமாமின் துஆவிற்கு ஆமீன் சொல்ல ஆரம்பித்து விடுவர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை பூரணமாக ஓதி அல்லாஹ்வின் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் அந்த திக்ருகள், அவ்ராதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் தங்களது தேவைகளை முறையிட்டு பிரார்த்திக்கக் கூடிய சிறந்த சந்தர்ப்பம் இது.

தனிமையாக இருந்து உள்ளம் உருகி தங்களுடைய கஷ்டங்களை தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடைய தேவைகள் என்னவென்று தெரியாத ஒருவர் (இமாம்) தயாரித்து வைத்த துஆவுக்கு ஆமீன் சொல்வது அறிவுள்ள செயலாகுமா?

துஆ ஓதுபவர் தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறார். பள்ளிக்கு வரக்கூடிய (தொழக்கூடிய) நூற்றுக் கணக்கான மக்களுக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் தேவைகள் இருக்கும். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் வெவ்வேறானதாக இருக்கும். எனவே அவர்கள் தான் அவர்களுடைய உண்மையான நிலையை அறிந்து உள்ளம் உருகி சொல்லுகின்ற விடயங்களை நன்குபுரிந்து தனக்கு தெரிந்த மொழியில் அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டும். இதுதான் அறிவுபூர்வமான செயலும் கூட.

என்னுடைய கஷ்டங்கள் என்ன? தேவைகள் என்ன என்று எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவருடைய கஷ்டங்கள் துன்பங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது. நான்தான் எனது தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். மற்றவர்கள் அவரவர்களுடைய தேவைகளை முறையிட வேண்டும்.

இமாம் தன்னுடைய தேவையை கருதி துஆவை கூட்டிக் கொள்ளவோ செய்வார். அவசர தேவை இருந்தால் அவசரமாக ஓதிவிட்டார் நகர்ந்து விடுவார். மக்களுக்கு உண்மை தெரியாததால் துஆவின் பரகத் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு கைகளை முகத்தில் தடாவிவிட்டு போய்விடுவார்கள்.

தொழுகை நடாத்தக் கூடிய இமாமின் பிரச்சினைகள் என்னவென்று தொழ வரக் கூடிய மக்களுக்குத் தெரியாது. தொழுகைக்கு வந்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இமாமுக்கும் தெரியாது. இந்நிலையில் இமாம் ஒருசில வசனங்களை அரபியில் எழுதி தயார்படுத்தி பாடமாக்கி கூற, அதற்கு மற்றவர்கள் ஆமீன் சொலலவேண்டும் என்பது அறிவீனமில்லையா?

பணத்தை பறிகொடுத்து..
பிள்ளையை பறிகொடுத்து..
மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து..
தொழிலை இழந்து..
சொத்தையிழந்து..
அனியாயத்திற்கு ஆளாகி..
வறுமையில் தள்ளாடி..
சோற்றுக்கு வழியின்றி..
ஏழ்மையில் உழன்று..
குடும்ப பிரச்சனையில் சிக்குண்டு..
சமூக பிரச்சனையில் அல்லல்பட்டு..

என பலரும் பல பிரச்சனைகளுடன் பள்ளிக்கு வருபவர். இந்நிலையில் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் துஆவிற்கு ஆமீன் சொல்வது பொறுத்தமா? அல்லது தானாக தன்னுடைய பிரச்சனைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடுவது பொறுத்தமா?

“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

வணக்கமாக புரிகின்ற இந்த துஆவை பணிவுடன் அடக்கத்துடன் அச்சத்துடன் ஆசையுடன் கேட்க வேண்டும். தாழ்ந்த குரலில் கேட்கவேண்டும் மனம் உருகிய நிலையில் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறோம் என்று அறிந்த நிலையில்- அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்த நிலையில் துஆ கேட்க வேண்டும். அப்போது தான் அந்த வணக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

துஆவுக்கான பணிவும் அச்சமும் தனியாக கேட்கும்போது தான் வருமே தவிர கூட்டத்தோடு கூட்டமாக சப்தமிடுவதால் வருவதில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து சப்தமிடும்போது எதைக் கேட்கிறோம் என்ற சிந்தனையோ விளக்கமோ வராது. எல்லோரும் ஆமீன் சொல்லும் போது நாமும் ஆமீன் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டும் வரும். கூட்டத்தில் எவராவது அழுவது போல் பாசாங்கு செய்தால் அதைப்பார்த்து பாசாங்கு காட்டி நடிக்கவோ அல்லது சிரிக்கவோ எண்ணம் வரும். ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையிலிருந்து சிந்தித்தால் உண்மை புரியும். இது எல்லாவற்றையும் நபி(ஸல்) அவர்கள் கூட்டு துஆ ஏற்படுத்தியதில்லை.

எனவே பகுத்தறிவுக்கு பொறுத்தமற்ற இந்த கூட்டு துஆவினால் மக்களை மடையர்களாக ஆக்குகின்றார்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவுமில்லை. கூட்டு துஆ என்ற அம்சத்தை உருவாக்கி பிறப்பு முதல் இறப்பு வரை கலக்கிக் கொண்டும் பணத்தை பறித்துக் கொண்டுமிருக்கிறார்கள். மக்கள் இதன் விபரீதத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவ்ராதுகளை ஓதி விட்டு தனித்தனியாக தங்களுடைய தேவைகளை அல்லாஹ்விடம் ஒப்புவித்து பிரார்த்திக்க வேண்டும்.

தொழுகை உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டாக துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூற ஆதாரமுண்டு என சில செய்திகளை காட்டுகிறார்கள். அதற்கு சஹீஹான ஆதாரங்கள் எதுவுமில்லை.

17 comments

  1. assalamu alaikkum vrb,,,,,,,,,

    இமாம் தமிழில் துவா கேட்க, ஆமீன் சொல்லலாமா.

  2. அஸ்ஸலமு அலைக்கும்

    சில ஆண்டுகளுக்கு முன் சத்தியக்குரல் பத்திரிகையில் கூட்டு துஆ பற்றி ஒரு சம்பூரணமான ஆய்வுக்கட்டுரை படித்தேன் அதை மீண்டும் படிப்பதற்கு உங்கள் இணையத்தில் பிரசுரிக்கலாமே .
    வஸ்ஸலாம்

  3. lafeer sarabdeen

    மாஸா அல்லாஹ்

  4. முகம்மத்

    @idris

    இமாம் துஆக் கேட்க ஆமீன் சொல்லலாம் குனூத்தில்,அல்ஹம்தில் அது தானே செய்கிறார்கள்

  5. Assalamualiaikum

    Please let us know what we have to recite after prayers before individual dua.

    Jazakallahu Haira

    Issadeen

  6. kuttu dua tholuhaikku pirahu bidhath endral veru sandharpangalil azin sattam enna?plz reply

  7. Assalamu Alaikum

    Kutu dua kudum shandharpam?
    Atharam?

    Plz send reply
    Jazakallahu hiran

  8. http://tamil.changathi.com/

    மேற்க்கண்ட இணைய தளதில் ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழில் பெற்று, காபி செய்து இங்கே பேஸ்ட் செய்யலாமே. தமிளிங்கிஷ் இல் படிப்பது சற்று சிரமம்

  9. kiyas, Maruthamunai

    In every jummah imam ask thua in tamil. So can we say aameen?. please reply me.

  10. பொதுவான துவாக்கலுக்கு அமேன் சொல்லலாமா? உதரணத்திர்க்கு எங்களை நரகத்தை விட்டும்,கடன் சுமைகலிலிருந்தும் பாது காப்பயாக என இமாம் கெட்கும் பொழுது ஆமின் சொல்லல்லமா?

  11. tell me this

    if imaam will ask in tamil
    could we say aameen?

  12. அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹ

    இமாம் முழுக்க முழுக்க அவருடைய தேவைகள் மட்டும் கேட்கிறார் என்றே இருக்கட்டும்.

    இமாம் உடைய சுய தேவைக்கு பலவினமான அடியார்கள் நாம் ஆமின் சொல்லுகிறோம் அந்த துஆ ஏற்கபட்டதா என்று நமக்கு தெரியாது.

    ஆனா பிற சகோதர்களுக்காக நாம துஆ (ஆமின்) சொல்லறதுனால மலக்குமார்கள் நமக்காக ஆமின் சொல்லுவார்கள்.

    பிற சகோதர்களுக்காக நாம துஆ (ஆமின்) சொல்லறதுனால நம்ம துஆ அல்லாஹ் விடம் சென்று அடைகிறது. – ஹதிஸ் திர்மிதி

    ஆகையால் நம்ம துஆ கபூல் ஆக இது ஒரு சிறந்த வழி

    அல்லாஹ்வின் நல்லடியார்களே ஒரு விஷயம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்க நாம ஒற்றுமையை விட்டு என்றோ விலகி விட்டோம். நபி ஸல் அவர்கள் ஒற்றுமையா இருந்தா நிச்சயம் நாம வெற்றி பெறுவோம் என்றார்கள்.

    ஆனா இன்றோ என் உடன் பிறவா சகோதர்கள் தேவை இல்லாம சர்ச்சை இட்டு ஒவ்வர் நொடியும் ஒற்றுமையை விட்டு விலகி சென்றே இருக்கோம்.

    அல்லாஹ்வின் நல்லடியார்களே புரிந்து கொள்ளுங்க நாம தவறு செய்ததாகவே இருக்கட்டும் நாம ஒற்றுமையா இருந்தால் இந்த ஒரு அமல் போதுமானது வெற்றி பெற.

    அல்லாஹ் மிக கிருபையாளன் அவன் நிச்சயம் நம்மை மன்னித்தருள்வான் ஆமின்.

  13. அஸ்ஸலாமு அழைக்கும்.

    தொழுகைக்கு பின்னால் கூட்டு துஆ என்பது நபி காட்டி தராத, மார்கத்தின் பெயரால் செய்யப்படும் பித்தத்.

    தொழுகைக்கு பிறகு நபி தனியாக துஆ செய்வதையே கற்று தந்து உள்ளார்கள். மீறி செய்வது நபிக்கு மாற்றம் செய்வது போலாகும்.

    ஓவ்வொரு பித்தும் வழிகேடு. ஓவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும் என்பது நபி மொழி. ஆக, கூட்டு துஆ நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் ஓர் காரியம்.

  14. a good advice to all mulims.

  15. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே. அஸ்ஸலாமு அழைக்கும்.
    *ஒரு வணக்கம் அல்லாஹ்விடம் ஆட்டுக்கொள்ளப் பட இரண்டடு நிபந்தனைகள் உண்டு : 1 -இக்லாஸ் (உளத்துய்மை ) 02 – இத்திபா (நபி கற்றுத்தந்த பிரஹர்ரம் அவரை பின்பற்றுதல்) இந்த 02 விதி முறைகளையும் ஒவ்வொரு இபாதத்திலும் கடை பிடித்தால் தான் நமது வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்படும்.

    கூட்டு துஆ பற்றி குரான் என்ன கூறுகிறது ?
    “உங்கள் இறைவனிடம் பணிவாகவும், இரகசியமாகவும் (சப்தத்தை தாழ்த்தி) பிரார்த்தனை செய்யுங்கள் . வரம்பு மீறுவோரை அவன் நேசிக்கமட்டன் ” சூரத்துல் அ`ராப்: 55 வது வசனம். (7:55)
    சிந்தியுங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதா ? ஊர் வழமைக்கு ஒத்துப்போவதா?

  16. அப்துல்ரஹீம் முஹம்மத் நளீம்

    உலக நடப்பில் என்கு கொஞ்சம் பணம் தேவை எட்படுஹின்றது அப்பொழுது யாரிடம் பணம் இருக்கின்றதோ அவரிடம்தான் நான் கேட்க வேண்டும் அவரின் மனைவியிடமோ அல்லது மகனிடமோ கேட்பது அல்லது அவர்களை விட்டு கேட்க வைப்பது முறையாகுமா ?பணம்தான் கிடைக்குமா குழப்பம்தான் மிஞ்சும்
    யாராகிலும் பரவாயில்லை கேட்பதை நேரடியாகவே கேட்போம்
    அல்லாஹ்விடம் கேட்பதை அல்லாஹ்விடமும்
    அண்டை வீட்டானிடம் கேட்பதாயின் நேரடியாக போய் அவனிடம் பணம் கேளுங்கள் இருந்தால் தருவான்
    பிரச்சினை முடிந்து விடும் அல்ஹம்து லில்லாஹ்

  17. ஆமின் என்ற வார்த்தை குரானில் எந்த அத்தியாயதில் உள்ளது. அதன் அர்த்தம் என்ன?

    please tell me. and send the answer to above mail.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *