Featured Posts

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
“அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?” .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- “ஆம்’! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது”.

அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
“எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?”
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
“ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!”
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: “எப்படி சொல்கிறீர்கள்……?”

“புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை”

“இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா…?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் – ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim)

இப்போது சொல்லுங்கள்: ‘நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: “ரோமானியர்களாக இருக்கலாம்”

“நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?”

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

“அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை..”

மேலும் அவர் சொன்னவை:
“ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.’

Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த
பார்வையினால் கிடைத்த நிஜம் இது.

“நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?” (அல் குர்-ஆன்: 41:53)

(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: ‘கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை ‘இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் வக்கிர மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் ‘வெறுப்புணர்வை’ கழற்றி வைத்துவிட்டு ‘விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).

15 comments

  1. சுட்டிப் பையன்

    சுட்டுவிரலே! நீ என்ன தான் நன்மைகளை சுட்டிக்காட்டினாலும், அதை சிலரால் பார்க்க முடியாது. அவர்களது பார்வைகளும், செவிபுலன்களும் திரையிடப் பட்டுள்ளதாக இறைவன் தன் திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.

  2. வாசகன்

    திருக்குரானில் உள்ள உன்மைகலை தனியே வெலிகொனர்வதால் என்னைபோல் அதிகம் அரியதவர்கல் அரிந்துகொள்ள நள்ள வாயிப்பு….,தொடருஙகல்……

  3. சுட்டுவிரல்

    //அவர்களது பார்வைகளும், செவிபுலன்களும் திரையிடப் பட்டுள்ளதாக இறைவன் தன் திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.//

    சுட்டிபையனே(ரே!)

    அந்த ‘அவர்கள்'(இன்றைய அபூஜஹல்கள்) யார் என்று நானும் நீங்களும் அறிய மாட்டோம்!

    எத்தனை எத்தனை வேலாயுதங்கள் (கேரளாவின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவர்) உண்மை உணர்ந்திருக்கிறார்கள் தெரியுமா?

    நமது பணி ‘ஊதுற சங்கை ஊதி வைப்பது தான்’. எந்த செவிகள் ஏற்கும் என்பதை யாரறிவார்?

    குறைந்த பட்சம், வெறுப்புகள் மறைந்து எதையும் “முழுமையாக” ஆராயும் மனப்பக்குவம் வராதா?
    நல்லிணக்கம் வளர்ப்போம்.

    (அப்புறம், நமக்கும் உங்களுக்கும் உள்ள பேர் பொருத்தத்தையும் ரசிச்சேன். நீங்க ‘தமிழ்மண’த்துக்கு புதுசா?)

  4. நல்லடியார்

    http://news.bbc.co.uk/2/hi/middle_east/4135857.stm

    http://www.natashatynes.org/gallery/2005/02/snowfall_amongs.html

    மத்திய கிழக்கில் குறிப்பாக ஐக்கிய அரபு மற்றும் லெபனானில் முதன்முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டது என்ற செய்தியையும் காண்க!

  5. சுட்டுவிரல்

    பின்னூட்டத்திற்கு நன்றி ஜமாலுத்தீன்.
    நீங்கள் சொல்ல வந்த கருத்து, எழுத்துப்பிழையால் களங்கப்படுவதை கவனியுங்கள்.

    நல்லடியார்,
    இக்கட்டுரைக்குத் துணையாக நீங்கள் பின்னூட்டிய சுட்டிகளுக்கு நன்றி!

    அனானிமஸ்,
    பெயரின்றி யாரும் வரக்கூடாது என்று அடைத்திருந்தும் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று வியக்கிறேன்.
    உங்கள் கருத்தும் இக்கட்டுரைக்கு துணை செய்யவில்லை என்பதால் Sorry,
    பெயருடன் வந்து விளக்குங்கள்.

  6. விருப்பு வெறுப்புகளைக் களைந்து விட்டு இது போன்ற நல்ல விஷயங்களை மென்மேலும் தரலாம். காலித் இப்னு வலீத் அபூசுப்யான் போன்றோரெல்லாம் எதிரிகளாக இருந்து பின் இஸ்லாத்தின் துண் ஆனார்கள்

  7. ///அனானிமஸ்,
    பெயரின்றி யாரும் வரக்கூடாது என்று அடைத்திருந்தும் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று வியக்கிறேன்.///

    அன்பின் சுட்டுவிரல்,
    நீங்கள் இணைத்துள்ள எடிட்டர்
    அனானிமஸ் மறுமொழிகளை அனுமதிக்கும்.

    அன்புடன்
    அபூ உமர்

  8. சோதனைக்காக அனானிமஸாக மறுமொழி இட்டுப் பார்த்தேன். நான் சொன்னது உண்மைதான் போல.

  9. சுட்டுவிரல்

    அன்பின் அபு உமர்
    மிக்க நன்றி

  10. சுட்டுவிரல்

    Anamatheyems,

    பதிவுக்கு சம்பந்தமில்லாத உங்களின் பதிவுகள் அழிக்கப்படுகின்றன்.
    இனியேனும் பதிவுக்கு (அ) முன் பின்னூட்டங்களுக்கு தொடர்புள்ளதாகவும், தனிநபர் தாக்குதலின்றியும் எழுத முயலுங்கள்.தேங்க்ஸ்.

  11. சத்தியத்தின் தேட்டமுடையவர்கள் என்றுமே
    இஸ்லாத்தின் செய்திகளை மறுக்கவியலாது என்பதற்கு Dr. Alfred Coroz
    மற்றுமொரு எடுத்துக்காட்டு.

  12. இறை நேசன்

    நம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மேலும் வலுபெறவும், சிந்திப்பவர்களுக்கு நேர்வழியை எளிதில் அடையவும், நிராகரிப்பாளர்களுக்கு நம்பிக்கையுடையவர்களை எதிர்க்க புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்திலும் மிக அருமையான அறியாத ஓர் விஷயத்தை தந்துள்ளீர்கள். மேலும் இதுபோல் அதிக விஷயங்கள் உங்கள் மூலம் வெளிக் கொணரச் செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன் இறைநேசன்

  13. Has Mohammed Nabi said anything about India too..? Please enlighten an Indian.

  14. Dear Suttu Viral,

    Thanks for your comments. And keep the same in future. Really it is shoot to one who can not accept this truth.

    Please go on!!!

    Asalamone
    Kingdom of Bahrain

  15. assalamu alaikum
    Alhamthulliah This is really good job.we have to communicate with more authenticated hadith to bublic keep it up.

    Wassalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *