எகலப்பை (ver.2.0) மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள்
எங்கு கிடைக்கும்?
யுனிகோடில் தட்டச்சு செய்ய எகலப்பை version 2.0 மிக உதவியாகவும் எளிதாகவும் இருக்கும். டிஸ்கி மற்றும் யூனிகோட் என்கோடிங்களுக்கான அஞ்சல், பாமினி, தமிழ் நெட் 99 விசைப்பலகைகள் கீழ்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
மேறிகூறிய தளத்தில் உங்களுக்கு தேவையான மென்பொருளை தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் அளவு ஏறக்குறைய 1.1 அல்லது 1.2 எம்.பி. மட்டுமே. ஏற்கனவே உங்களிடம் எ-கலப்பையின் பழைய பதிப்பு (Version 1.0) இருந்தால் முதலில் அதனை நீக்கியபிறகு, கம்ப்யூட்டரை Re-start செய்துவிட்டு புதிய பதிப்பை நிறுவுங்கள்.
நிறுவும்போது 3 தமிழ் யூனிகோட் எழுத்துருக்களும் உங்கள் எழுத்துரு ஃபோல்டரில் இறங்கிக்கொள்ளும்.
பாமினி விசைப்பலகை பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், பாமினி விசைப்பலகையை பயன்படுத்தி டிஸ்கி அல்லது யுனிகோட் எழுத்துருவை தட்டச்சு செய்யலாம் என்பதே.
தட்டச்சு செய்யும் முறை
எகலப்பை (version 2.0) விண்டோஸ் Xp பயன்படுத்துபவர்களுக்கு மிக இலகுவானது. எனவே விண்டோஸ் Xp இயங்குதளத்தில் நிறுவப்பட்ட Microsoft word, Frontpage-ல் நேரடியாக தட்டச்சு செய்யலாம்.
எ-கலப்பையை இயக்கிய பிறகு, Alt+1, Alt+2, Alt+3 (முறையே ஆங்கிலம், தமிழ் யுனிகோட், டிஸ்கி ஆகியவற்றின் மாற்று ஸ்விட்சுகளை) இயக்கி உங்கள் விருப்பத்திற்கு தட்டச்சு செய்யலாம்.
Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் டிஸ்கி எழுத்துருவை டைப் செய்ய விரும்பினால், TSC_Avarangal-ஐ தேர்ந்தெடுத்து பிறகு இதற்குறிய விசையை இயக்கி தட்டச்சு செய்ய வேண்டும்.
Word pad, forum, Weblog போன்றவற்றில் இதற்கு அவசியம் இல்லை. நேரடியாக நீங்கள் விரும்பிய விசையை (Alt+1, Alt+2, Alt+3) தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்.
பிரச்சினையும் தீர்வும்
யுனிகோடில் தட்டச்சு செய்யும் போது “ஹு, ஹூ, ஜு ஷு” போன்ற எழுத்துக்கள் தட்டச்சு விசைப்பலகையில் வராமல் போனால் Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் “ஹ, ஜ, ஷ” போன்றவற்றை தட்டச்சு செய்தபின்னர் கீழ்கண்ட படிகளை உபயோகிங்கள்:
1. insert
2. symbol…
3. உங்களுக்கு தேவையான எழுத்துருவை Font என்ற இடத்தில் தேர்வு செய்யுங்கள்.
4. இப்பொழுது ” ு, ூ ” என்ற குறிகளை தேர்வு செய்து insert -ஐ கிளிக் செய்யுங்கள்.
Assalamu Alaikum.
Sir,
Enethu computeril tamil eluthurukkal varukinrana. Anal avaikalukkidail varum ilakkangalum tamil eluthukkalakave varukinrana. Nivairthi seyye enna seiyalam enpathai vilakkamaka thayavu seithu min anchal moolamaka arivikkavum.
Vassalam.
Mohamed Jalaldeen.
Wa Alaikkum Salam Warah..
Goto your windows XP Control panel
–> Regional and Language options
and Select language preference as “English” instead of “Arabic or other Language”
Now, insha Allah everything okay.