Featured Posts

[01] முன்னுரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-1

ஆசிரியர்:
பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்

தமிழாக்கம்:
முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்

முன்னுரை

அகிலத்தாரின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், பின்பற்றி வாழ்வதை நமக்கு கட்டளையிட்டிருக்கும் அவன், (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்குவதை நமக்கு தடை செய்திருக்கின்றான். எந்தத் தூதரை பின்பற்றப்படுவதற்காக அவன் அனுப்பி வைத்தானோ, அந்தத் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் மீதும், அன்னாரைப் பின்பற்றி நடந்த ஏனையோர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

பித்அத்தின் வகைகள் பற்றி விளக்கும் இந்நூல், அவைகளைத் தடுப்பதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலின் மூலம் எதிர்ப்பார்ப்பது அல்லாஹ்விற்கு, அவனது வேதத்திற்கு, அவனது தூதருக்கு, முஸ்லிம் தலைவர்களுக்கு, பொதுவாக அனைவருக்கும் நலவை நாடுவதின் அவசியத்தையாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

One comment

  1. இர்ஷாத்

    சலஃபி அறிஞர்களின் புத்தகம் தமிழில் மொழிபெயர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *