இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி
அகீதா – கொள்கை: தவ்ஹீத் இளைஞர்களுக்கு அன்பான அறிவுரைகள்
வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை)
வீடியோ: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்
இலங்கையை சார்ந்த அஷ்ஷைக் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக தஃவாவில் களப்பணி ஆற்றிக் கொண்டுயிருக்கின்றார். தமிழகத்ததோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ளவர். தமிழகததில் உள்ள பல முன்னனி அழைப்பாளார்களுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தஃவா பணி செய்துள்ளார்கள். (தற்போது 1435 ரமழான் முதல் 15 நாட்கள் கோவை மஸ்ஜித் முஸ்லீமீன் பள்ளியில் தராவீஹ் தொழுகைக்கு பின் தொடர் பயான் செய்துவருகின்றார்). ஷைக் அவர்களிடம் இஸ்லாம்கல்வி.காம் இணையத்தளத்திற்காக அகீதா தொடர்பாக தற்கால பிரச்ச்னைகளை மையமாக வைத்து கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றை வழங்குமாறு கேட்டபோது மனமுவந்து சம்மதம் தெரிவித்தார். தள ஒளிப்பதிவின் போது ஏற்பட்ட சில அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது நீண்ட நேர தள ஒளிப்பதிவிற்க்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் (ஜஸாக்குமுல்லாஹ் ஹைர்).
ஷைக் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இறுதிவரை சத்திய மார்க்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து தஃவா பணியாற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் இந்த புனித ரமழான் மாதத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தவ்ஹீத் இளைஞர்களுக்கான அன்பான அறிவுரையுடன் இந்த தொடர் நிறைவடைகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
இது சம்மந்தமான வாசகர்களின் கருத்துக்களை எங்களுக்கு அறியத்தரவும்.
– இஸ்லாம்கல்வி.காம்
[audio:http://www.mediafire.com/download/kc0lzz0ysja7791/QA9-advice_to_youth.mp3]